Wednesday, October 28
Shadow

தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் மறைந்த தினம்

இவர் 400 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தும், 50 திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் என்ற கிராமத்தில் பிறந்தவர் மணிவண்ணன். இவரின் இயக்கத்தில் 50 திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் வெளிவந்துள்ளன. மேலும் இவர் நடிகர் சத்தியராஜின் கல்லூரி நண்பர் ஆவார், சத்யராஜை வைத்து சுமார் 25 திரைப்படங்கள் எடுத்துள்ளார்.

சிறு வயதிலிருந்தே அரசியல் பின்னணியில் வளர்ந்த மணிவண்ணன் நக்சலைட்டுகளின் தலைவராக இருந்த சாரு மஜும்தாரைச் சந்தித்தவர். நாத்திகம் மற்றும் திராவிடக் கொள்கையில் பிடிப்புள்ள மணிவண்ணன் தனியீழப் போராட்டத்தையும் விடுதலைப் புலிகளையும் ஆதரித்தவர். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திலும், நாம் தமிழர் கட்சியிலும் பணியாற்றியவர்.

மணிவண்ணன் 15 ஜூன் 2013 அன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். மணிவண்ணன் ஏற்கனவே இதய அறுவைச் சிகிச்சையும், முதுகில் தண்டுவட அறுவைச் சிகிச்சையும் செய்து கொண்டிருந்தார். அதனாலேயே சில ஆண்டுகள் படங்கள் இயக்காமல் இருந்தார். மணிவண்ணனுக்கு மனைவியும் ஜோதி என்ற மகளும், ரகுவண்ணன் என்ற மகனும் உள்ளனர்.

இவர் நடித்த திரைப்படங்கள்

நாகராஜ சோழன் எம்.ஏ,எம்.எல்.ஏ, வேலாயுதம், சதுரங்கம், தில்லாலங்கடி, ராமன் தேடிய சீதை, குருவி, நம் நாடு, சீனா தானா, சிவாஜி, தம்பி, ஆதி, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், மஜா, ஜீ, லண்டன், விஸ்வ துளசி, மதுர, சுள்ளான், ஜனா, எங்கள் அண்ணா, அரசாட்சி, எனக்கு 20 உனக்கு 18, அலாவுதீன், பார்த்திபன் கனவு, வசீகரா, பிரியமான தோழி, பம்மல் கே. சம்பந்தம், பஞ்சதந்திரம். ரெட், ஆண்டான் அடிமை, டும் டும் டும், காசி, பிரியாத வரம் வேண்டும், என்னவளே, பார்த்தாலே பரவசம், I Have Found It, முகவரி, ரிதம், உன்னைக்கொடு என்னைத் தருகிறேன், தாஜ்மகால், துள்ளாத மனமும் துள்ளும், சின்னத் துரை, காதலர் தினம், முதல்வன்

முகம், நிலவே முகம் காட்டு, படையப்பா, ராஜஸ்தான், சங்கமம், தொடரும், பொற்காலம், என் ஆசை ராசாவே, கல்யாண கலாட்டா, ஜீன்ஸ், காதலே நிம்மதி, தேசீய கீதம், காதலுக்கு மரியாதை, கடவுள், அவ்வை சண்முகி, காதல் கோட்டை, கோகுலத்தில் சீதை, அமைதிப் படை, கொடிபறக்குது

இவர் இயக்கிய படங்கள்

ஆண்டான் அடிமை, அமைதிப்படை, சந்தனக் காற்று, கோபால ராவ் காரி அப்பாய் (Gopala Rao Gaari Abbai), ஹம் பி இன்சான் ஹெய்ன் (Hum Bhi Insaan Hain), காதல் ஓய்வதில்லை, சின்னத் தம்பி பெரிய தம்பி, அன்பின் முகவரி, அம்பிகை நேரில் வந்தாள், இங்கேயும் ஒரு கங்கை, இருபத்தி நாலு மணிநேரம், ஜனவரி ஒன்னு, குவாகுவா வாத்துக்கள், Noorava Roju, நூறாவது நாள், இளமைக் காலங்கள், ஜோதி

இவர் கதை வசனம் எழுதிய திரைப்படங்கள்

நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, ஆகாய கங்கை, காதல் ஓவியம், லாட்டரி டிக்கட், நேசம்