
தெலுங்கு நடிகையான இவர், கன்னடா, ஹிந்தி மற்றும் தமிழ் மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் நடிக்க வருவதற்கு முன்பு தொலைகாட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர்.
ஹைதராபாத்தில் பிறந்த இவர், கடந்த 2006ம் ஆண்டு முதல் முதலாக Kithakithalu என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்தார். தொடர்ந்து பல்வேறு நாயகர்களுடன் நடித்த இவர் தமிழில் தேசிய விருது வென்ற இயக்குனர் பாலாவின் அவன் இவன் படத்தில் நடித்தார்.
பழனியப்பா கல்லூரி, அவன் இவன், துங்காவனம் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
