
“காதலுக்கு வயது கிடையாது… காலம் மாறினாலும் அதன் உணர்வு மாறாது” – ‘ஹேஷ்டேக் லவ்’ குழுவினர்
சென்னை: நவீன தலைமுறையின் காதல், உறவுகள் மற்றும் எதிர்பார்ப்புகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள Netflix தொடரான ‘ஹேஷ்டேக் லவ்’ தொடர்பான நிகழ்ச்சியில் படக்குழுவினர் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
‘ஹேஷ்டேக் லவ்’ என்ற தலைப்பே இன்றைய தலைமுறையின் வாழ்க்கை முறையையும் காதல் குறித்த அவர்களின் பார்வையையும் பிரதிபலிப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர். ‘ஹேஷ்டேக்’ என்பது தற்போதைய டிரெண்ட் மற்றும் நவீனத்தைக் குறிக்கும் நிலையில், ‘லவ்’ என்பது காலம் மாறினாலும் அனைவருக்கும் பொதுவான இயல்பான உணர்வு என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்தத் தொடரை உருவாக்கும் பயணத்தில் பல்வேறு சவால்கள் ஏற்பட்டதாக தயாரிப்பாளர் தெரிவித்தார். ஒரு கட்டத்தில் ஏற்பட்ட தடையை சமாளிக்க குழுவினர் அளித்த ஆதரவு முக்கிய காரணமாக இருந்ததாகவும், ஒரு படைப்பை வெற்றிகரமாக உருவாக்குவதற்கு தனிநபரின் முயற்சியைவிட ஒட்டுமொத்த குழுவின் பங்களிப்பே முக்கியம் என்றும் அவர் கூறினார்.
நவீன நகர்ப்புற வாழ்க்கையில் காதலைத் தேடும் இளைஞர்களின் மனநிலையை இந்தத் தொடர் பிரதிபலிப்பதாக Netflix தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இன்றைய தலைமுறையினர் அதிகமான மனிதர்களுடன் தொடர்பில் இருந்தாலும், தங்களுக்கு பொருத்தமான ஒருவரை கண்டுபிடிப்பதும் உண்மையான காதலை புரிந்துகொள்வதும் சவாலாக இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
இயக்குநர் பாலாஜி பேசுகையில், “யாரும் காதலில் நிபுணர் கிடையாது. ஒவ்வொரு காதல் கதையும் நமக்கு புதிதாக ஒன்றைக் கற்றுக்கொடுக்கும். இந்தத் தொடரின் கதையை மற்றவர்கள் உருவாக்கிய நிலையில், அதை இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது” என்றார்.
தொடரின் காட்சியமைப்பை இயல்பாகவும் அதே நேரத்தில் அழகாகவும் உருவாக்க படக்குழு கவனம் செலுத்தியதாகவும், ஒளிப்பதிவு, கலை, ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கூட்டு முயற்சியே இந்தத் தொடரின் தோற்றத்திற்கு காரணம் என்றும் இயக்குநர் தெரிவித்தார்.
நடிகை ஐஸ்வர்யா, இதுவரை தான் நடித்த தீவிரமான கதாபாத்திரங்களிலிருந்து மாறுபட்டு, ‘ஹேஷ்டேக் லவ்’ மூலம் தனது மென்மையான பக்கத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைத்ததாக கூறினார்.
மேலும், தாரா என்ற தனது கதாபாத்திரத்தின் மூலம் காதல் மற்றும் உறவுகளில் ‘Compatibility’ எனப்படும் மனப்பொருத்தத்தின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டதாகவும் ஐஸ்வர்யா தெரிவித்தார்.
காதல் என்பது ஒரு குறிப்பிட்ட தலைமுறைக்கானது அல்ல என்றும், தலைமுறைகள் மாறினாலும் அதன் அடிப்படை உணர்வு தொடர்ந்து மாறாமல் இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர். ‘ஹேஷ்டேக் லவ்’ இன்றைய தலைமுறையின் காதல் மற்றும் உறவுகளை எவ்வாறு அணுகுகிறது என்பதை வெளிப்படுத்தும் தொடராக உருவாகியுள்ளது.
“Love Has No Age… Its Emotion Remains the Same Even as Times Change” – Team ‘Hashtag Love’
Chennai: Netflix’s upcoming series ‘Hashtag Love’, which explores modern relationships, love and the expectations of today’s generation, recently brought together its cast and crew, who shared their experiences of creating the series.
The team explained that the title ‘Hashtag Love’ itself reflects the lifestyle and perspective of the current generation. While ‘Hashtag’ represents what is trending, contemporary and modern, ‘Love’ remains one of the most natural and universal emotions shared by people across generations.
Speaking about the making of the series, the producer revealed that the project faced several challenges during its journey. The support of the entire team helped them overcome a crucial roadblock, highlighting how a successful project is ultimately the result of collective effort rather than the work of an individual.
The Netflix team also noted that ‘Hashtag Love’ explores the experiences of young people navigating love and relationships in an increasingly connected urban world. Despite having more opportunities to meet and connect with people, finding the right person and understanding genuine love can still be challenging for today’s generation.
Director Balaji said that nobody can truly claim to be an expert in love, as every love story offers something new to learn. He added that directing a story developed by other writers was a fresh and interesting experience for him.
The director also highlighted the importance of the technical departments in creating the visual world of the series. The cinematography, production design and costumes have been carefully crafted to make the world of ‘Hashtag Love’ look visually appealing while retaining a sense of realism.
Actress Aishwarya said that the series gave her an opportunity to explore a softer side of her acting, after portraying several intense characters in her previous projects.
Speaking about her character Tara, Aishwarya added that the role made her look at relationships from a different perspective and understand the importance of compatibility in love.
The team emphasised that while generations and lifestyles may change, the fundamental emotion of love remains constant. ‘Hashtag Love’ aims to present a contemporary take on love, relationships and the emotional challenges faced by today’s generation.
