“காதலுக்கு வயது கிடையாது… காலம் மாறினாலும் அதன் உணர்வு மாறாது” – ‘ஹேஷ்டேக் லவ்’ குழுவினர்
“காதலுக்கு வயது கிடையாது… காலம் மாறினாலும் அதன் உணர்வு மாறாது” – ‘ஹேஷ்டேக் லவ்’ குழுவினர்
சென்னை: நவீன தலைமுறையின் காதல், உறவுகள் மற்றும் எதிர்பார்ப்புகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள Netflix தொடரான ‘ஹேஷ்டேக் லவ்’ தொடர்பான நிகழ்ச்சியில் படக்குழுவினர் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
‘ஹேஷ்டேக் லவ்’ என்ற தலைப்பே இன்றைய தலைமுறையின் வாழ்க்கை முறையையும் காதல் குறித்த அவர்களின் பார்வையையும் பிரதிபலிப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர். ‘ஹேஷ்டேக்’ என்பது தற்போதைய டிரெண்ட் மற்றும் நவீனத்தைக் குறிக்கும் நிலையில், ‘லவ்’ என்பது காலம் மாறினாலும் அனைவருக்கும் பொதுவான இயல்பான உணர்வு என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்தத் தொடரை உருவாக்கும் பயணத்தில் பல்வேறு சவால்கள் ஏற்பட்டதாக தயாரிப்பாளர் தெரிவித்தார். ஒரு கட்டத்தில் ஏற்பட்ட தடையை சமாளிக்க குழுவினர் அளித்த ஆதரவு முக்கிய காரணமாக இருந்ததாகவும், ...



