Friday, November 13
Shadow

‘லவ் மேட்டர்’ படத்தில் ‘லுங்கி பாய்ஸ்’ ராஜ்பிரியன் குரலில் இரண்டு பாடல்கள் – இளசுகளைக் கவர வருகிறது கலகலப்பான காதல் கதை!

‘லவ் மேட்டர்’ படத்தில் ‘லுங்கி பாய்ஸ்’ ராஜ்பிரியன் குரலில் இரண்டு பாடல்கள் – இளசுகளைக் கவர வருகிறது கலகலப்பான காதல் கதை!

GenZ தலைமுறையின் காதல், வாழ்க்கை குறித்த புரிதலை இன்றைய இளைஞர்களின் மொழியில் சொல்லும் புதிய திரைப்படம் ‘லவ் மேட்டர்’!

காதல், வாழ்க்கை, இளமை என இன்றைய தலைமுறையினர் எதிர்கொள்ளும் உணர்வுகளையும் குழப்பங்களையும் நகைச்சுவையுடன் பேசும் வகையில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘லவ் மேட்டர்’. ஹை கிரியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் செல்வ அன்பரசன் தயாரிக்க, மகாதாரா பகவத் இப்படத்தை எழுதி இயக்கி வருகிறார்.

காதலிக்கும் வயதில் வாழ்க்கையின் அருமை புரிவதில்லை; வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும் நேரத்தில் காதல் கைகூடாமல் போகிறது. இந்த இரண்டுக்கும் இடையிலான உண்மையை இன்றைய GenZ தலைமுறையினர் தங்களுடைய வாழ்க்கைச் சூழலோடு பொருத்திப் புரிந்துகொள்ளும் வகையில், சமகால இளைஞர்களின் ரசனைக்கேற்ற கதைக்களத்துடன் இப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தின் இசைப் பணிகள் கவனம் ஈர்த்து வரும் நிலையில், ‘லுங்கி பாய்ஸ்’ புகழ் ராஜ்பிரியன் இரண்டு பாடல்களைப் பாடியுள்ளார். குறிப்பாக, “கெஞ்சி கெஞ்சி கெஞ்சி தம்பி நல்லா கெஞ்சி, கஞ்சி கஞ்சி கஞ்சி லவ் பண்ணா நீ கஞ்சி” என்ற வித்தியாசமான வரிகளைக் கொண்ட பாடலை அவர் உற்சாகமான குரலில் பாடியுள்ளார். இப்பாடல் இளைஞர்களிடையே கவனம் பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுதவிர, படத்தில் இடம்பெறும் மற்றொரு பாடலையும் ராஜ்பிரியன் பாடவுள்ளார்.

மேலும், இப்படத்தின் முதல் பாடலான ‘ஆரம்பம் ஆரம்பம்’ பாடலை பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.என். சுரேந்தர் பாடியுள்ளார். மாறுபட்ட இசை அணுகுமுறையிலும் இளைஞர்களைக் கவரும் பாடல்களுடனும் ‘லவ் மேட்டர்’ திரைப்படம் தயாராகி வருகிறது.

இப்படத்தின் மூலம் இயன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அபிநயா கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் இயக்குநர் ரஞ்சித் ராகவா, ராயல் பிரபாகர், அச்சாரம் சேகர், ஸ்ரீவி, திலீப், ஆர்.ஜே. பொற்கொடி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் மற்றொரு சிறப்பம்சம், இதன் பின்னணியில் பணியாற்றும் இளம் தொழில்நுட்பக் கலைஞர்களின் கூட்டணி. எம்.ஜி.ஆர். அரசு திரைப்படக் கல்லூரி மாணவரான மகாதாரா பகவத், இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதி இயக்குகிறார். தயாரிப்பாளர் செல்வ அன்பரசனும் திரைப்படக் கல்லூரியின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி, இப்படத்தின் இசையமைப்பாளர், படத்தொகுப்பாளர் உள்ளிட்ட முக்கியத் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் எம்.ஜி.ஆர். அரசு திரைப்படக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் என்பது கூடுதல் சிறப்பு. இளம் படைப்பாளர்களின் கூட்டு முயற்சியில் உருவாகும் ‘லவ் மேட்டர்’, புதிய தலைமுறையின் காதல் உணர்வுகளையும் வாழ்க்கைப் பார்வையையும் திரையில் சுவாரஸ்யமாகப் பதிவு செய்யத் தயாராகி வருகிறது.

இப்படத்தின் மக்கள் தொடர்புப் பணிகளை கோவிந்தராஜ் கவனித்து வருகிறார்.

‘Lungi Boys’ Fame Rajpriyan Sings Two Songs for ‘Love Matter’ – A Gen Z Romantic Entertainer in the Making!

‘Love Matter’ explores love, life and relationships through the perspective of today’s Gen Z generation.

A new Tamil film titled Love Matter, which explores the complexities of love, life and relationships among today’s youngsters, is currently being produced by Selva Anbarasan under the banner of High Creators. The film is written and directed by Mahathara Bhagavath.

The film revolves around an interesting perspective on love and life: when people are in love, they often fail to understand life; by the time they understand life, love may no longer be there. Through this relatable thought, Love Matter aims to convey an important message to the Gen Z generation in a contemporary style that connects with their mindset and lifestyle.

Adding an interesting musical element to the film, ‘Lungi Boys’ fame Rajpriyan has lent his voice to two songs. One of the songs features the quirky and catchy lyrics, “Kenji Kenji Kenji Thambi Nalla Kenji, Kanji Kanji Kanji Love Panna Nee Kanji.” His energetic rendition is expected to bring a fun-filled flavour to the film. Rajpriyan will also be singing another song for the project.

The film’s first song, titled ‘Aarambam Aarambam’, has been sung by renowned playback singer S.N. Surendar. With its youthful musical approach and entertaining compositions, the film promises to offer a refreshing musical experience.

Ian makes his debut as the male lead, while Abhinaya makes her debut as the female lead. The supporting cast includes director Ranjith Raghava, Royal Prabhakar, Acharam Sekar, Srivi, Dileep and RJ Porkodi, among others.

One of the notable aspects of Love Matter is the involvement of young talents from the M.G.R. Government Film and Television Training Institute. Mahathara Bhagavath, a student of the institute, has written the story, screenplay and dialogues, besides directing the film. Producer Selva Anbarasan, popularly known as Anbu Sir through his Instagram videos featuring dogs, is also associated with the film and is a film institute alumnus.

Interestingly, the music composer, editor and several other key technicians working on the film are also students of the M.G.R. Government Film and Television Training Institute. The project thus brings together a team of emerging filmmakers and technicians, showcasing their creative talents.

With its contemporary take on relationships, youthful storytelling and entertaining music, Love Matter is shaping up to be an engaging romantic entertainer aimed at connecting with the younger generation.

PRO: Govindaraj