Friday, January 17
Shadow

புரட்சிகரமான வரிகளோடு வெளிவந்து பரபரப்பை கிளப்பி வரும் மதுரவீரன் சிங்கள் “ என்ன நடக்குது நாட்டுல “ பாடல்

V ஸ்டுடியோஸ் மற்றும் P.G மீடியா வொர்க்ஸ் வழங்கும் திரைப்படம் மதுரைவீரன். விஜி சுப்ரமணியன் தயாரிப்பில் , சண்முகபாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்து எழுதி இயக்கியுள்ளார் P.G.முத்தையா.

இப்படத்தின் முதல் சிங்கள் பாடல் “ என்ன நடக்குது நாட்டுல “ இன்று காலை 11மணியளவில் வெளியாகி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமூகத்தில் நடக்கும் அவலங்களை தோலுரிக்கும் வகையில் புரட்சிகரமாக இந்த பாடல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. நடிகர் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றும் இந்த பாடலை கவிஞர் யுகபாரதி எழுதியுள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். பாடலிலிருந்து சில வரிகள்

“ கொள்ளை அடிச்சவன் கூட்டுல,
நம்ம குடும்பம் நிக்குது ரோட்டுல.
எதையும் நாம பாக்காம எதுத்து கேள்வி கேக்காம ,

அடங்கி ஒடுங்கி கிடப்பதால ஆளுக்காளு நாட்டாம.“ போன்ற பல புரட்சிகரமான வரிகளோடு “ என்ன நடக்குது நாட்டுல “ பாடல் வெளிவந்து பரபரப்பை கிளப்பியுள்ளது . இந்த பாடல் வெளியாவதற்கு முன்னரே என்ன நடக்குது நாட்டுல என்ற ஹாஷ் டேக்கில் சமூகத்தில் நடக்கும் அவலங்கள் பற்றி ட்வீட் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply