
“மதுரவீரன்” ஜல்லிக்கட்டு பற்றிய படம் மட்டும் அல்ல அரசியலையும் மையப்படுத்தியே இருக்கும் இயக்குநர் P.G. முத்தையா
நான் ஒளிப்பதிவாளராக பல படங்களில் பணியாற்றியுள்ளேன். முதலில் ஓரு படம் இயக்க வேண்டும் என்று எண்ணிய போது நமக்கு தெரிந்த அல்லது நமது வாழ்கையில் இருந்து எடுத்தால் சரியாக இருக்கும் என்பதால் தான் “மதுரவீரன்” கதை உருவானது. இப்படம் ஜல்லிக்கட்டு பற்றிய படம் மட்டும் அல்ல அதன் பின்பு நிகழும் அரசியலையும் மையப்படுத்தியே திரைக்கதை அமைந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் இப்படத்தில் ஹீரோ என்றால் நல்லது மட்டுமே செய்வது போன்றும் வில்லன் என்றால் கெட்டது மட்டுமே செய்வது போன்றும் காட்சிகள் படத்தில் இல்லை. இப்படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களும் சராசரி மனிதர்களைப் போலவே இருக்கும். அனைத்து கதாபாத்திரங்களின் பின்னணியிலும் ஓரு நியாயமான காரணங்களுக்காக குரல் கொடுக்கும் காட்சிகள் தான் உண்டு.
படத்தை பார்க்கும்போது அவரவர்கள் முன்வைக்கும் காரணங்களும் , வாதங்களும் நியாயமானதாக இருக்கும். இப்படத்தில் வரும் கிளைமாக்ஸ் காட...