Monday, April 20
Shadow

விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாகும் மகிமா நம்பியார்

சாட்டை’, ‘குற்றம்-2’3, ‘புரியாத புதிர்’, ‘கொடி வீரன்’, ஆகிய படங்களில் நடித்தவர் மகிமா நம்பியார். அருள் நிதியின் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்திலும் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவின் ராசியான நடிகை என்றால் அது மகிமா நம்பியார் என்று சொல்லலாம் தொடர்ந்து இவர் நடிக்கும் படங்கள் வெற்றி படங்களாக அமைந்து வருகிறது இவருக்கு என்று நல்ல கதையம்சங்கள் கொண்ட படங்களில் நடிக்கிறார் என்றும் சொல்லலாம் அந்த வகையில் இவர் தற்போது இவர் விக்ரம் பிரபுவுடன் ஜோடி சேருகிறார்

இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்தப் படங்களைத் தொடர்ந்து அசுரகுரு என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் மகிமா நம்பியார். ‘அசுரகுரு’ படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் மகிமா நம்பியார் முதன் முதலாக ‘அசுரகுரு’ படத்தில் இணைய இருக்கிறார். ராஜ்தீப் இந்த படத்தை இயக்குகிறார். படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.

விக்ரம் பிரபு நடித்துள்ள ‘பக்கா’ மற்றும் ‘துப்பாக்கி முனையில்’ ஆகிய இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாகவிருக்கின்றன.