
“மண்டாடி” வெற்றி… சூரியின் வெற்றியாகக் கொண்டாடிய ரசிகர்கள்!
“நம்ம வீட்டு பையன் ஜெயித்திருக்கிறார்” – சூரியின் வளர்ச்சியைப் பார்த்து பெருமைப்பட்ட வெற்றிமாறன் | “மதிமாறன் அவரை மாஸ் ஹீரோவாக மாற்றிவிட்டார்” – எல்ரெட்குமார்
ஒரு படம் வெளியாகி வெற்றி பெறுவது ஒரு விஷயம். அந்தப் படத்தின் வெற்றியை படக்குழுவினர் மட்டுமின்றி, ரசிகர்களும் தங்களுடைய வெற்றியாகக் கொண்டாடுவது இன்னொரு விஷயம். அப்படியொரு கொண்டாட்டமாக அமைந்தது ‘மண்டாடி’ திரைப்படத்தின் வெற்றி விழா.
சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற இந்த வெற்றி விழாவில் படக்குழுவினர் ஒன்றாகக் கூடி, திரைப்படத்தை வரவேற்ற ரசிகர்களுக்கும், படத்தின் வெற்றிக்குப் பின்னால் இருந்த ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்தனர்.
சூரி, சுஹாஸ், மஹிமா நம்பியார், சத்யராஜ், ரவீந்திர விஜய், பால சரவணன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் இ. ராகவ் படத்தொகுப்பு பணியையும், டி.ஆர்.கே. கிரண் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். பீட்டர் ஹெய்ன் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்துள்ளார். ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் சார்பில் எல்ரெட்குமார் தயாரித்துள்ளார்.

“மக்கள் கொண்டாடுகிறார்கள் என்றால் நாமும் கொண்டாட வேண்டும்!”
விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் பேசியபோது, ஒரு படத்தின் உண்மையான வெற்றி என்பது மக்களின் வரவேற்புதான் என்பதை குறிப்பிட்டார்.
“மக்கள் ஒரு படத்தை ஏற்றுக்கொண்டு கொண்டாடுகிறார்கள் என்றால், அதற்குள் வேறு எதையும் பேச வேண்டியதில்லை. அந்த வெற்றியை நாமும் கொண்டாட வேண்டும்” என்றார்.
அதே நேரத்தில் மதிமாறனுக்கு ஒரு முக்கியமான அறிவுரையையும் அவர் கூறினார்.
நீண்ட காலமாக எதற்காக போராடினார்களோ அந்த இடத்தை தற்போது அடைந்துவிட்டதாகக் கூறிய வெற்றிமாறன், இனி மதிமாறன் நிதானமாகப் பயணிக்க வேண்டும் என்றார்.
தயாரிப்பாளர் எல்ரெட்குமாரின் சினிமா மீதான நம்பிக்கையையும் அவர் நினைவுகூர்ந்தார். ‘விடுதலை 1’ படத்தை எடுக்கும் போது படத்தின் செலவு குறித்து தான் தயங்கியதாகவும், ஆனால் எல்ரெட்குமார் “பரவாயில்லை, எடுக்கலாம்” என்று முழு நம்பிக்கையுடன் கூறியதாகவும் தெரிவித்தார்.
அதேபோல் ‘மண்டாடி’ படத்திலும் மதிமாறன் நினைத்த காட்சி சரியாக வராதபோது, செலவைப் பற்றி கவலைப்படாமல் மீண்டும் கடலுக்குச் சென்று படமாக்க தயாரிப்பாளர் வாய்ப்பு கொடுத்ததாகக் குறிப்பிட்டார்.

“சூரியை மதிமாறன் மாஸ் ஹீரோவாக மாற்றிவிட்டார்!”
சூரியின் திரைப்பயணத்தைப் பற்றி பேசிய வெற்றிமாறன், அவரது வளர்ச்சி ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமானதாக மாறியிருப்பதாகக் கூறினார்.
ஒரு காலத்தில் ஒரு ஷாட்டில் தொடங்கிய சூரியின் பயணம் இன்று கதாநாயகனாகவும், ரசிகர்களின் நம்பிக்கைக்குரிய நடிகராகவும் வளர்ந்திருப்பதை சுட்டிக்காட்டிய அவர், சூரியின் வெற்றியை மக்கள் தங்களுடைய வெற்றியாகவே பார்க்கிறார்கள் என்றார்.
“நம்ம வீட்டு பையன் ஒருவன் ஜெயித்திருக்கிறான்” என்ற உணர்வுதான் சூரியை மக்கள் கொண்டாடுவதற்குக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“மதிமாறனுக்கு நம்பிக்கை கொடுத்தால் அவர் வேலையை முடித்துக் காட்டுவார்!”
தயாரிப்பாளர் எல்ரெட்குமார், இயக்குநர் மதிமாறனைப் பற்றிப் பேசும்போது அவரது வேலை செய்யும் விதத்தை குறிப்பிட்டுப் பாராட்டினார்.
அதிகம் பேசாமல் அமைதியாக இருந்து, சுற்றி நடப்பவற்றை கவனித்து உள்வாங்கிக் கொள்வது மதிமாறனின் இயல்பு என்று கூறிய அவர், ஒரு இயக்குநரிடம் தான் முதலில் எதிர்பார்ப்பது ஒழுக்கமும் வேலையின் மீதான அர்ப்பணிப்பும் தான் என்றார்.
திரைக்கதையில் இருப்பதை மட்டுமே படமாக்குவேன் என்று மதிமாறன் தன்னிடம் கூறியதாகவும், அதை அவர் அப்படியே கடைப்பிடித்ததாகவும் எல்ரெட்குமார் தெரிவித்தார்.
மேலும், ‘மண்டாடி’ படத்தை பல்வேறு தொழில்நுட்ப சவால்களுக்கு மத்தியில் உருவாக்கியதாகக் கூறிய அவர், தமிழ் படமாகத் தொடங்கிய முயற்சி பின்னர் ஐந்து மொழிகளில் வெளியாகும் அளவுக்கு விரிவடைந்ததாகவும், ஐமேக்ஸ் உள்ளிட்ட பெரிய திரை வடிவங்களுக்கும் படம் சென்றதாகவும் குறிப்பிட்டார்.
“வெற்றிமாறன் சார் சூரியை கதாநாயகனாக மாற்றினார்; மதிமாறன் அவரை மாஸ் ஹீரோவாக மாற்றிவிட்டார்” என்ற அவரது வார்த்தைகள் விழாவில் கவனம் பெற்றன.

சூரியின் அடக்கம்… எல்ரெட்குமார் சொன்ன சம்பவம்!
சூரியைப் பற்றி பேசும்போது, படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஒரு சம்பவத்தை எல்ரெட்குமார் பகிர்ந்துகொண்டார்.
கடலுக்குள் படப்பிடிப்பை முடித்துவிட்டு கடுமையான சோர்வுடன், காலில் அடிபட்ட நிலையில் சூரி இருந்ததாகக் கூறினார். அப்போது தன்னைப் பார்த்த சூரி, “ஒரு பத்து நிமிடம் காத்திருக்கிறீர்களா?” என்று கேட்டதாகவும், அதன் பின்னர் அங்கிருந்த தொழிலாளர்கள் மற்றும் மற்றவர்களிடம் பேசிவிட்டு தன்னை சந்திக்க வந்ததாகவும் தெரிவித்தார்.
கதாநாயகனாக உயர்ந்த பிறகும் அனைவரிடமும் அன்பாகவும் எளிமையாகவும் பழகும் அவரது இயல்புதான் அவரை இந்த இடத்திற்கு கொண்டு வந்துள்ளதாக எல்ரெட்குமார் கூறினார்.

“மஹிமாவின் காட்சிகளில் ரசிகர்கள் உணர்ச்சிவசப்படுகிறார்கள்!”
‘மண்டாடி’ படத்தில் மஹிமா நம்பியார் நடித்த காட்சிகளுக்கும் திரையரங்குகளில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக எல்ரெட்குமார் தெரிவித்தார்.
பால சரவணனின் காமெடி காட்சிகளுக்கும் ரசிகர்களிடம் இருந்து தொடர்ந்து சிரிப்பலை கிடைப்பதாகக் கூறிய அவர், பீட்டர் ஹெய்னின் ஆக்ஷன் காட்சிகளையும் பாராட்டினார்.
படத்தில் சத்யராஜின் திரையிருப்பு படம் முழுவதும் உணரக்கூடியதாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“இந்தப் படம் இன்னும் பல ஆண்டுகள் பேசப்படும்!”
ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்ததால் விழாவில் நேரில் கலந்து கொள்ள முடியாத நடிகர் ரவீந்திர விஜய் வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்தார்.
‘மண்டாடி’ போன்ற படத்தை இயக்கிய மதிமாறனுக்கும், அதை நம்பி தயாரித்த எல்ரெட்குமாருக்கும் நன்றி தெரிவித்த அவர், எஸ்.ஆர். கதிரின் கேமரா கடலின் பிரம்மாண்டத்தையும் மனித உணர்வுகளின் ஆழத்தையும் அழகாகக் காட்டியிருப்பதாகப் பாராட்டினார்.
படத்தொகுப்பின் வேகம் படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றதாகவும் கூறிய அவர், இந்தப் படத்தின் வெற்றியை கொண்டாட வேண்டும் என்றார்.

“இந்தப் பாத்திரம் என்னால் முடியுமா என்ற பயம் இருந்தது” – மஹிமா
‘மண்டாடி’ படத்தில் தனது கதாபாத்திரத்தை ஏற்கும்போது தயக்கம் இருந்ததாக மஹிமா நம்பியார் தெரிவித்தார்.
இயக்குநர் மதிமாறன், அந்த கதாபாத்திரத்தை செய்ய சிரமப்பட வேண்டியிருக்கும் என்றும், அதற்குத் தயாரா என்றும் கேட்டதாகவும், தான் தயாராக இருப்பதாகக் கூறியதாகவும் தெரிவித்தார்.
அந்த முடிவு இன்று தனது திரைப்பயணத்தில் மறக்க முடியாத கதாபாத்திரத்தை பெற்றுத் தந்துள்ளதாக மஹிமா கூறினார்.
திரையரங்குகளுக்குச் செல்லும் போதெல்லாம் ரசிகர்கள் சூரியின் வெற்றியை தங்களுடைய வெற்றியாகக் கொண்டாடுவதைப் பார்க்கும்போது பெருமையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
“இந்த வெற்றியை பாய்மரப் படகு சொந்தக்காரர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்!”
விழாவின் முக்கியமான தருணமாக அமைந்தது இயக்குநர் மதிமாறன் புகழேந்தியின் பேச்சு.
‘மண்டாடி’ திரைப்படத்தின் வெற்றியை பாய்மரப் படகு சொந்தக்காரர்களுக்கும், தலைமுறை தலைமுறையாக கடலுடன் போராடி தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாத்து வரும் மீனவர்களுக்கும் சமர்ப்பிப்பதாக அவர் தெரிவித்தார்.
“இந்தப் படம் உங்களுக்கானது” என்று கூறிய மதிமாறன், இந்த உலகத்தை தனக்கு அறிமுகப்படுத்திய நண்பர்கள் மற்றும் உதவியவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
ஒரு சராசரி பட்ஜெட்டில் தொடங்கிய திரைப்படம் தயாரிப்பாளர் எல்ரெட்குமாரின் நம்பிக்கையால் பெரிய படமாக மாறியதாகக் கூறிய அவர், தமிழ் திரைப்படமாகத் தொடங்கிய படம் ஐந்து மொழிகளிலும், ஐமேக்ஸ் திரையிலும் வெளியாகும் அளவுக்கு வளர்ந்ததற்கு தயாரிப்பாளரின் ஆதரவே காரணம் என்றார்.
“ஒரு பெரிய படத்தை இயக்கினால்தான் பெரிய இயக்குநராக வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு சிறிய இயக்குநரிடம் பெரிய கனவு இருந்தாலும், அதை நம்பும் ஒரு தயாரிப்பாளர் இருந்தால் அதைச் சாதிக்க முடியும்” என்றார் மதிமாறன்.

“முத்துக்காளி எனக்கு மிகவும் நெருக்கமான கதாபாத்திரம்!”
சூரி நடித்த முத்துக்காளி கதாபாத்திரத்தைப் பற்றிப் பேசிய மதிமாறன், அந்தப் பாத்திரம் தனக்கு மிகவும் அந்தரங்கமானது என்றார்.
20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு மனிதன் தனது ஊருக்குத் திரும்பும்போது அவனுடைய மனநிலை எப்படி இருக்கும், அவன் எப்படி நடந்து கொள்வான், சிறிய விஷயங்கள் கூட அவனுடைய பழைய நினைவுகளைத் தூண்டினால் எப்படி எதிர்வினையாற்றுவான் என்பதையெல்லாம் சூரியிடம் விரிவாகப் பேசியதாகவும் தெரிவித்தார்.
அந்தக் கதாபாத்திரத்திற்கு சூரி உயிர் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்த இயக்குநர், படக்குழுவில் பணியாற்றிய அனைவரையும் நினைவுகூர்ந்து நன்றி தெரிவித்தார்.
“முத்துக்காளியாக மதிமாறன்தான் என் கண்களுக்குத் தெரிகிறார்!”
இறுதியாக பேசிய சூரி, ‘மண்டாடி’ படத்தை தங்களுடைய படைப்பாக ஏற்றுக்கொண்டு கொண்டாடும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
முத்துக்காளி கதாபாத்திரத்தை உருவாக்கிய விதத்தைப் பற்றி அவர் விரிவாகப் பேசினார்.
“ஒருவன் 20 ஆண்டுகள் வாழ்க்கையை இழந்துவிட்டு திரும்பி வந்தால் அவன் எப்படி இருப்பான்? அவனுக்குள் இருக்கும் கோபம், வலி, பழைய நினைவுகள் அவனுடைய நடவடிக்கைகளில் எப்படி வெளிப்படும்?” என்று தொடர்ந்து யோசித்ததாக சூரி கூறினார்.
இயக்குநர் மதிமாறனுடன் தொடர்ந்து விவாதித்து, அந்தக் கதாபாத்திரத்தை உருவாக்கியதாகவும், இன்று மக்கள் தனது நடிப்பைப் பாராட்டும்போது, தனக்கு முத்துக்காளியாக மதிமாறன்தான் தெரிகிறார் என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

ரசிகர்கள் முதல் முன்னணி நடிகர்கள் வரை…
‘மண்டாடி’ படத்தைப் பார்த்து ரஜினிகாந்த் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்ததாக சூரி கூறினார்.
சரத்குமார், நெப்போலியன், பார்த்திபன், விக்ரம், கார்த்தி, சிலம்பரசன், சிவகார்த்திகேயன், விமல், நானி, ஆர்.ஜே. பாலாஜி உள்ளிட்ட பலரும் தன்னைத் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்ததாக அவர் நினைவுகூர்ந்தார்.
மேலும் படத்தைப் பற்றி ஆயிரக்கணக்கான ரீல்ஸ்களை ரசிகர்கள் உருவாக்கி வருவதாகவும், “மக்களே படத்தை கொண்டு சேர்ப்பார்கள்” என்று தயாரிப்பாளர் கூறியது போலவே தற்போது நடந்து கொண்டிருப்பதாகவும் சூரி மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
படத்தின் வெற்றிக்கு பின்னால் உழைத்த ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்த சூரி, தனது பயணத்தில் எப்போதும் எளிமையை விட்டுவிடாமல் இருப்பேன் என்றும் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
‘மண்டாடி’ வெற்றி விழா, ஒரு திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டமாக மட்டுமல்லாமல், ஒரு இயக்குநரின் கனவு, ஒரு தயாரிப்பாளரின் நம்பிக்கை, ஒரு நடிகரின் நீண்ட பயணம் ஆகிய மூன்றும் ஒரே இடத்தில் இணைந்த தருணமாக அமைந்தது.

‘Mandadi’ Success… Fans Celebrate It as Soori’s Victory!
“A boy from our own home has won” – Vetrimaaran takes pride in Soori’s journey | “Madhimaaran has transformed him into a mass hero” – Elred Kumar
A film achieving success after its release is one thing. But when not just the film’s team, but the fans themselves celebrate that success as their own, it becomes something truly special. That was exactly the spirit witnessed at the success celebration of ‘Mandadi’.
The success event, held at the Chennai Trade Centre, brought together the cast and crew, who thanked the audience for embracing the film and everyone who contributed to its success.
Starring Soori, Suhas, Mahima Nambiar, Sathyaraj, Ravindra Vijay and Bala Saravanan among others, the film is directed by Madhimaaran Pugazhendhi. G.V. Prakash Kumar has composed the music, while S.R. Kathir has handled the cinematography. Pradeep E. Ragav is the editor and T.R.K. Kiran is the art director. Peter Hein has choreographed the action sequences. The film is produced by Elred Kumar under the banner of R.S. Infotainment.
“When people celebrate a film, we should celebrate it too!”
Speaking at the event, director Vetrimaaran said that the true success of a film lies in the audience’s acceptance and appreciation.
“When people accept a film and celebrate it, there is nothing else that needs to be said. We should celebrate that success along with them,” he said.
At the same time, Vetrimaaran offered an important piece of advice to director Madhimaaran.
He said that Madhimaaran had finally reached the place he had been striving towards for a long time and advised him to move forward with patience and composure.
Vetrimaaran also recalled producer Elred Kumar’s faith in cinema. He revealed that while making Viduthalai Part 1, he had initially been concerned about the film’s budget, but Elred Kumar had confidently told him, “It’s okay, let’s make it.”
He said the same confidence was evident during the making of Mandadi. When a particular sequence did not turn out as Madhimaaran had envisioned, the producer did not hesitate to give the team another opportunity to shoot the sequence at sea without worrying about the additional expense.

“Madhimaaran has transformed Soori into a mass hero!”
Speaking about Soori’s journey in cinema, Vetrimaaran said that the actor’s growth has made him extremely relatable to audiences.
Pointing out that Soori’s journey began with appearing in a single shot and has now taken him to becoming a lead actor and an artiste trusted by audiences, Vetrimaaran said people view Soori’s success as their own.
He said the reason audiences celebrate Soori is because they feel, “A boy from our own home has won.”
“If you give Madhimaaran the confidence, he will get the job done!”
Producer Elred Kumar praised director Madhimaaran for his approach to filmmaking.
He said Madhimaaran is someone who does not speak much, but quietly observes and absorbs everything happening around him. According to Elred Kumar, the first qualities he looks for in a director are discipline and dedication towards the work.
Elred Kumar revealed that Madhimaaran had told him that he would shoot only what was written in the screenplay and that the director had followed that principle throughout the making of the film.
He also spoke about the various technical challenges involved in making Mandadi. What began as a Tamil film eventually expanded into a project releasing in five languages and reaching large-format screens, including IMAX.
His statement, “Vetrimaaran sir transformed Soori into a hero; Madhimaaran has transformed him into a mass hero,” became one of the highlights of the event.

Soori’s humility… A special incident recalled by Elred Kumar!
While speaking about Soori, Elred Kumar shared an incident from the film’s shoot.
He said that after completing a shoot in the sea, Soori was extremely exhausted and had also injured his leg. When Soori saw Elred Kumar, he reportedly asked him, “Can you wait for ten minutes?”
Soori then spoke to the workers and others present at the location before coming to meet the producer.
Elred Kumar said that Soori’s ability to remain affectionate and humble with everyone even after becoming a lead actor was one of the qualities that had brought him to his current position.
“Fans are getting emotional during Mahima’s scenes!”
Elred Kumar said that Mahima Nambiar’s scenes in Mandadi have also been receiving a strong response from audiences in theatres.
He noted that Bala Saravanan’s comedy scenes continue to generate laughter among viewers and also praised Peter Hein’s action sequences.
He added that Sathyaraj’s presence can be felt throughout the film.
“This film will be remembered for many years!”
Actor Ravindra Vijay, who could not attend the event in person as he was shooting in Hyderabad, conveyed his wishes through a video message.
He thanked director Madhimaaran for making a film like Mandadi and producer Elred Kumar for having the confidence to back it.
He praised S.R. Kathir’s cinematography for beautifully capturing both the vastness of the sea and the depth of human emotions.
He also said the pace of the editing had taken the film to another level and called for the film’s success to be celebrated.
“I was afraid whether I would be able to pull off this character” – Mahima Nambiar
Mahima Nambiar revealed that she initially had some hesitation about taking up her role in Mandadi.
She said director Madhimaaran had told her that the character would be challenging and asked whether she was prepared to take it on. Mahima said she agreed to the challenge.
According to the actress, that decision eventually gave her one of the most memorable characters of her career.
She also said she felt proud whenever she saw audiences celebrating Soori’s success as their own when she visited theatres.
“I dedicate this success to the owners of the traditional sailing boats!”
One of the most significant moments of the event was director Madhimaaran Pugazhendhi’s speech.
He dedicated the success of Mandadi to the owners of traditional sailing boats and to the generations of fishermen who have struggled with the sea while protecting their livelihoods.
“This film is for you,” Madhimaaran said, while also thanking the friends and well-wishers who introduced him to this world and supported him throughout the journey.
He said the film, which began with an average budget, grew into a much larger project because of producer Elred Kumar’s faith in the vision.
According to Madhimaaran, the film’s journey from a Tamil production to a five-language release and its screening in IMAX were made possible because of the producer’s support.
“You don’t have to direct a big-budget film to become a big director. Even if a small-time director has a big dream, it can be achieved when there is a producer who believes in that dream,” Madhimaaran said.
“Muthukkaali is a character very close to me!”
Speaking about Soori’s character Muthukkaali, Madhimaaran said the role was extremely personal to him.
He explained that he had discussed with Soori in detail how a person might feel after returning to his hometown following 20 years away, how he might behave, and how even small things could trigger memories from his past and influence his reactions.
The director thanked Soori for bringing the character to life and expressed his gratitude to everyone who worked on the film.
“When I see Muthukkaali, I see Madhimaaran!”
Speaking last, Soori thanked audiences across the world for embracing Mandadi as their own film and celebrating its success.
He spoke at length about the process of creating the character of Muthukkaali.
Soori said he kept thinking about how a person would be after losing 20 years of his life and returning home, and how his anger, pain and memories from the past would manifest in his actions.
He revealed that he had constantly discussed the character with director Madhimaaran and worked with him to shape Muthukkaali.
“Today, when people appreciate my performance, I see Madhimaaran himself as Muthukkaali,” Soori said emotionally.
From fans to leading stars…
Soori also revealed that several prominent personalities from the film industry, including Rajinikanth, had congratulated him after watching Mandadi.
He recalled receiving calls and messages of appreciation from Sarathkumar, Napoleon, Parthiban, Vikram, Karthi, Silambarasan, Sivakarthikeyan, Vimal, Nani, R.J. Balaji and several others.
He further expressed his happiness over the thousands of reels being created by fans around the film.
Soori said the producer’s earlier statement that “the people themselves will take the film to everyone” had now come true.
Thanking every person who worked behind the film’s success, Soori concluded his speech by saying that he would always remain grounded and never give up his simplicity throughout his journey.
The ‘Mandadi’ success celebration was more than just a gathering to celebrate a film’s success. It became a moment where a director’s dream, a producer’s faith and an actor’s long journey came together on one stage.
