“மண்டாடி” வெற்றி… சூரியின் வெற்றியாகக் கொண்டாடிய ரசிகர்கள்!
“மண்டாடி” வெற்றி… சூரியின் வெற்றியாகக் கொண்டாடிய ரசிகர்கள்!
“நம்ம வீட்டு பையன் ஜெயித்திருக்கிறார்” – சூரியின் வளர்ச்சியைப் பார்த்து பெருமைப்பட்ட வெற்றிமாறன் | “மதிமாறன் அவரை மாஸ் ஹீரோவாக மாற்றிவிட்டார்” – எல்ரெட்குமார்
ஒரு படம் வெளியாகி வெற்றி பெறுவது ஒரு விஷயம். அந்தப் படத்தின் வெற்றியை படக்குழுவினர் மட்டுமின்றி, ரசிகர்களும் தங்களுடைய வெற்றியாகக் கொண்டாடுவது இன்னொரு விஷயம். அப்படியொரு கொண்டாட்டமாக அமைந்தது ‘மண்டாடி’ திரைப்படத்தின் வெற்றி விழா.
சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற இந்த வெற்றி விழாவில் படக்குழுவினர் ஒன்றாகக் கூடி, திரைப்படத்தை வரவேற்ற ரசிகர்களுக்கும், படத்தின் வெற்றிக்குப் பின்னால் இருந்த ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்தனர்.
சூரி, சுஹாஸ், மஹிமா நம்பியார், சத்யராஜ், ரவீந்திர விஜய், பால சரவணன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். ஜி....
