Tuesday, February 11
Shadow

மரகதநாணயம் – திரைவிமர்சனம் (100% ஜொலிக்கிறது) Rank 4.5/5

தமிழ் சினிமாவில் வாரம் வாரம் படங்கள் வெளியாகிறது அதில் எல்லா படங்களும் சிறந்த படங்கள் ஆவதில்லை சில படங்கள் நம் மனதுக்கு மிக நெருங்கிய படமாக இருக்கும் ஒரு சிலருக்கு காதல் படம் ஒரு சிலருக்கு இசை இப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒரு விதம் பிடிக்கும் ஆனால் சினிமா ரசிகர்களுக்கு வெரிட்டி இருந்தான் தான் அப்புறம் புதுமை இருக்கணும் அப்படி ஒரு படம் நீண்ட இடைவெளிக்கு பின் வந்துள்ளது என்று சொன்னால் அது மரகதநாணயம் படம் என்று தான் சொல்லணும் புதுமையான கதை வித்தியாசமான திரைகதை அருமையான காமெடி சலிக்காத காட்சிகள் கன கச்சிதமான நடிகர் நடிகை இப்படி எல்லாம் மிகவும் கவனமாக தேர்ந்த்டுதுள்ளறார் இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் என்று தான் சொல்லணும்.

ஒரு படம் பார்க்கும் போது நம்மை அது ரசிக்கவைக்கணும் ஆனால் இந்த படம் எல்லோரையும் ரசிக்க மட்டும் இல்லை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது. பொதுவாக பத்திரிக்கையாளர் காட்சியில் விசில் சத்தம் கைதட்டல் இப்படி எதுவும் இருக்காது மிகவும் அமைதியாகத்தான் பார்ப்பார்கள் அதில் ஒரு சில படங்கள் தான் விதி விலக்கு எல்லோரையும் ரசிக்கவைக்கும் அப்படி ரசிக்கவைத்த படம் மரகதநாணயம் என்று தான் சொல்லணும் என் பக்கத்தில் இருந்த நண்பர் விழுந்து விழுந்து சிரித்தது எனக்கு கொஞ்சம் ஆச்சிரியபடுத்தியது அவர் மட்டும் இல்லை அரங்கமே சிரிப்பில் அதிர்ந்தது என்றும் சொல்லலாம் அந்த அளவுக்கு ஒரு நகைசுவை படம்.

இன்று பேய் படம் மத்தியில் பேய் இல்லாமல் ஆவியை வைத்து அலறல் இல்லமல் தேவை இல்லாமல் மேக்கப் சும்மாவே புஷ் அஷ் என்று இல்லாமல் அரங்கத்துக்கு வரும் அனைவரும் கொடுத்த காசுக்கு சந்தோசமாக போங்க என்று இயக்குனர் உத்திரவாதம் கொடுத்துள்ளார் என்று தான் சொல்லணும். இந்த படத்தில் ஒரு முக்கிய விஷயம் எந்த எதிர்பார்ப்பு இல்லாமல் பொங்கல் மிகவும் ரசிப்பீர்கள் குறிப்பாக நிக்கி கல்ராணி அருண்ராஜா காமராஜ் ராமதாஸ் ஆதி, ஆனந்தராஜ் இவர்கள் நாம் மனதில் ஒன்று நினைத்து இருப்போம் ஆனால் படத்தில் மிக வித்தியாசமான ஒரு அனுபவம் உங்களுக்கு இவர்கள் கொடுப்பார்கள்

சரி படத்தில் நடித்த நட்சத்திரம் யாரு கதைகளம் என்ன என்று பார்க்கலாம் நாயகன் ஆதி, நாயகி நிக்கிகல்ராணி முக்கிய வேடத்தில் ராமதாஸ் அருண்ராஜா காமராஜ், காளி வெங்கட், டேனியல், ஆனந்தராஜ் கோட்டா ஸ்ரீனிவாசராவ் பிரம்மானந்தம்,M.S.பாஸ்கர் மைம்கோபி மற்றும் பலர் நடிப்பில் ஷங்கர் ஒளிப்பதிவில் திபு நைணன் தாமஸ் இசையில் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஆக்ஸ்சஸ் பிலிம் பாக்டரி தயாரிப்பில் வெளிவரும் படம் தான் மரகதநாணயம்.

படத்தின் கதை சொன்னால் படம் பார்க்கும் சுவாரிசம் போகிவிடும் ஆகவே ஒரு வரிக்கதை மட்டும் சொல்லுகிறோம். மரகதநாணயம் இதை தொடுபவர்களுக்கு மரணம் நிச்சயம் அப்படி இருக்கும் கல்லை ஒரு சீன காரன் அந்த கல் எனக்கு வேணும் என்று மைம்கோபியிடம் வர மைம்கோபி பலரை அணுகுகிறார் அந்த கல்லை எடுக்க ஆனால் யாரும் உயிருக்கு பயந்து முன் வரமாட்டேன் என்று சொல்லுகிறார்கள் ஆனால் நம் ஹீரோ பண கஷ்டத்தால் நான் செய்கிறேன் என்று சொல்ல அதற்கான வேளைகளில் இறங்குகிறார்.

அவருக்கு உதவி செய்ய டேனி காரணம் அவருக்கும் பணத்தின் மேல் உள்ள ஆசை இந்த கல்லை எப்படி எடுக்கிறார்கள் அப்படி எடுக்கும் பொது என்ன நடக்கிறது என்பதை மிக சுவாரிசமாக காமெடியாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் காட்சிக்கு காட்சி வித்தியாசம் மிக சிறந்த நடிப்பு நடித்த அனைவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர் ஒரு காட்சிக்கு வரும் காளி வெங்கட் முதல் அனைவரும் நம்மை மிகவும் சிரிக்க வைத்துள்ளனர்.

இந்த படம் ஹாலிவுட் பாண்டசி காமெடி படங்கள் பார்த்து இருப்பீர்கள் அப்படி ஒரு படம் இந்த முயற்சிக்கு இயக்குனரை பாராட்டனும் தமிழுக்கு கிடைத்த மிக சிறந்த இயக்குனர் ஷங்கர் போல மிக சிறந்த இயக்குனராக வருவார் இந்த படத்தின் இயக்குனர் தன முதல் படத்தில் இப்படி ஒரு கதைகளம் எடுத்து அதை மிக சிறப்பாக செய்து உள்ளார் .

படத்தின் மிக பெரிய பலம் என்று சொன்னால் அது நிக்கிகல்ராணி என்று தான் சொல்லணும் இந்த கதாபாத்திரத்துக்கு இவரை தவிர மிக சிறந்த நடிகை நிச்சயம் வேறு யாரும் இல்லை என்று ஆணித்தரமாக சொல்லலாம் அந்த ளவுக்கு மிக சிறந்த நடிப்பு

அதே போல இதுவரை நடித்த எல்லா படங்களிலும் சண்டையை நம்பி நடித்த ஆதி இந்த படத்தில் தான் தன திறமையை நம்பி நடித்துள்ளார் என்று சொல்லணும் அந்தளவுக்கு ஒரு சிறந்த நடிப்பு அதே போல அவரின் நண்பராக வரும் டேனி படத்தின் மிக பெரிய பலம் இவருக்கான திறமையை வெளிபடுத்தும் ஒரு நல்ல பாத்திரம் கிடைத்த வாய்ப்பை மிக அருமையாக பயன்படுத்தியுள்ளார். ராமதாஸ் நல்ல நடிகர் நல்ல நகைசுவை நடிகர் என்று மீண்டும் நிருபித்துள்ளார்.

படத்துக்கு மிக பெரிய பலம் ஒளிப்பதிவாளர் P.V.ஷங்கர் மற்றும் கலை இயக்குனர் N.K.ராகுல் இவர்களின் பங்கு மிக சிறப்பு தமிழ் படமா இல்லை ஆங்கில படமா எண்டு சொல்லும் அளவுக்கு பல காட்சிகளில் இவர்களின் உழைப்பு தெரிகிறது.

படத்தின் முக்கிய பங்கு கிராபிக்ஸ் என்கிற VFX மற்றும் FX அருமையான வேலைபாடு என்று தான் சொல்லணும் பல இடங்களில் கிராபிக்ஸ் என்று தெரியாத அளவுக்கு காட்சிகள் அமைத்து இருப்பது மேலும் பலம்

மொத்தத்தில் மரகதநாணயம் ஜொலிக்கிறது

Leave a Reply