Friday, April 17
Shadow

“மீசைய முறுக்கு 2” – ‘பப்பாளி பழமே’ பாடல் வைரல்… கானா பீட்டில் கைகொட்டும் ரசிகர்கள்!

“மீசைய முறுக்கு 2” – ‘பப்பாளி பழமே’ பாடல் வைரல்… கானா பீட்டில் கைகொட்டும் ரசிகர்கள்!

தமிழ் திரையுலகில் இளம் தலைமுறையின் கல்ட் ஹிட்டாக திகழ்ந்த “மீசைய முறுக்கு” திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகி வரும் “மீசைய முறுக்கு 2” படம், ஆரம்பத்திலிருந்தே ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தும் வகையில், இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் “பப்பாளி பழமே” தற்போது வெளியாகி இணைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

முன்னதாக வெளியான டைட்டில் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து வெளியான முதல் பாடல் ‘ஆரா பத்துக்கு பத்து’ குறுகிய நேரத்தில் டிரெண்டாகி, படத்தின் மீதான ஹைப்பை அதிகரித்தது. அந்த வரிசையில் தற்போது வெளியாகியுள்ள “பப்பாளி பழமே” பாடல், முழுக்க முழுக்க கானா ஸ்டைலில் உருவாகி, இளைஞர்களை கவர்ந்து வருகிறது.

ஹிப்ஹாப் தமிழா ஆதி கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் மற்றும் இசை என பல பொறுப்புகளை ஏற்று உருவாக்கி வரும் இப்படத்தில், அவருடன் பாலிவுட் நடிகை கேட்டிகா சர்மா, சைத்ரா ஜே. ஆச்சார், யோகி பாபு, கருணாஸ், ‘ஆடுகளம்’ நரேன், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

“பப்பாளி பழமே” பாடலை கானா வினோத், கானா தரணி மற்றும் ஹிப்ஹாப் தமிழா இணைந்து பாடியுள்ளனர். பாபா பாஸ்கர் நடன அமைப்பில் உருவான இந்த பாடல், தனது லோகல் பீட் மற்றும் எளிமையான வரிகளால் ரசிகர்களிடையே வேகமாக பிரபலமடைந்து வருகிறது.

பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் மற்றும் அவ்னி மூவிஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த கமர்ஷியல் என்டர்டெய்னர், இறுதி கட்ட பணிகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாடல்கள் மற்றும் ப்ரோமோஷன்கள் மூலம் ஏற்கனவே எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள “மீசைய முறுக்கு 2”, வெளியீட்டுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

“Meesaya Murukku 2” – ‘Pappali Pazhame’ Song Goes Viral… Fans Groove to the Gaana Beat!

The sequel to the cult youth hit “Meesaya Murukku”, “Meesaya Murukku 2”, has been generating massive buzz among fans right from its announcement. Adding more excitement, the film’s second single titled “Pappali Pazhame” has now been released and is trending across digital platforms.

Earlier, the title teaser and first look received a strong response from audiences. Following that, the first single “Aara Pathukku Pathu” became an instant trend within a short span, further boosting expectations for the film. Now, the newly released “Pappali Pazhame” continues that momentum, captivating listeners with its energetic gaana-style vibe.

The film is helmed by Hiphop Tamizha Adhi, who has taken on multiple responsibilities including story, screenplay, dialogues, direction, and music. The cast features Bollywood actress Ketika Sharma, Chaitra J. Achar, Yogi Babu, Karunas, ‘Aadukalam’ Naren, Nassar, among others.

The song “Pappali Pazhame” is sung by Gaana Vinoth, Gaana Dharani, and Hiphop Tamizha, with choreography by Baba Bhaskar. With its catchy local beats and simple, relatable lyrics, the track is quickly gaining popularity among youth.

Produced by Benz Media Private Limited and Avni Movies, this commercial entertainer is currently in its final stages of production. With songs and promotional content already creating strong hype, fans are eagerly awaiting the film’s release.