Tuesday, April 21
Shadow

பிரபுதேவாவின் மெர்குரி படத்தின் கிளைமாக்ஸ் 15 நிமிடத்திலே வந்துவிடுமாம்

பிரபு தேவா மிக பெரிய இடைவெளிக்கு பின் மீண்டும் தமிழ் சினிமாவில் தலைகாட்ட ஆரம்பிதுள்ளார் இது அவர் ரசிகர்களுக்கும் மட்டும் இல்லாமல் அனைவரையும் கவர்ந்துள்ளது அதிலும் தன் படங்கள் முற்றிலும் வித்தியாசமாக இருக்கவேண்டும் என்று மிகவும் கவனாமாக தேர்ந்தெடுக்கிறார் . அப்படியான ஒரு படம் தான் தற்போது நடித்து வெளியாக இருக்கும் படம் மெர்குரி

கார்த்திக் சுப்பராஜ் டைரக்சனில் சைலன்ட் த்ரில்லராக உருவாகியுள்ள படம் ‘மெர்க்குரி’. பிரபுதேவா. படம் ரிலீஸுக்கு தயாராகி விட்டாலும், தற்போது நடைபெறும் ஸ்டிரைக் காரணமாக அமைதி காக்கிறது. சுமார் ஒண்ணே முக்கால் மணி நேரம் ஓடும் விதமாக உருவாகியுள்ளது இந்தப்படம்..

சமீபத்தில் இந்தப்படம் பற்றி சில தகவல்களை பகிர்ந்துகொண்ட பிரபுதேவா, இந்தப்படம் துவங்கிய பதினைந்தாவது நிமிடத்திலேயே கிளைமாக்ஸ் துவங்கி விடும். அதன்பின் சீட் நுனியில் அமர்ந்து கொண்டு தான் படம் பார்ப்பீர்கள். அதனால் இங்கே டான்ஸ் இல்லையே, இங்கே பைட் இல்லையே என்கிற எண்ணமே உங்களுக்கு எழாது என்று கூறியுள்ளார் பிரபுதேவா