
ஏற்சல் படத்துக்கு சோதனை மேல் சோதனை என்று தான் சொல்லணும் காரணம் ஒன்னு போனால் ஒன்னு ஒரு வருது பட்ட இடத்திலே படும் என்று சொல்லவது போல இப்போது தான் திரையரங்க பிரச்சனை முடிந்தது அதற்குள் அடுத்த பிரச்சனை ஆரம்பம் ஆகிவிட்டது.
அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள மெர்சல் படத்திற்கு தொடர்ந்த பிரச்சனைகளாக வரிசைகட்டி வருகிறது.
முதலில் டைட்டிளுக்கு தடை போட்டு பின்னர் கோர்ட் நீக்கியது, பின்னர் கேளிக்கை வரி பிரச்சனையால் தயாரிப்பாளர் சங்கம் புதிய படம் ரிலீஸ் ஆக கூடாது என ஸ்ட்ரைக் அறிவித்தது. அந்த பிரச்சனை இன்னும் முடிந்தபாடில்லை.
இதுஒருபுறமிருக்க தற்போது படத்தில் பயன்படுத்திய புறா கிராபிக்ஸ் தான் என்பதற்கு போதிய ஆதாரம் சமர்பிக்காததால் விலங்குகள் நல வாரியம் தாடையில்லா சான்று வழங்கவில்லை. மேலும் படத்தில் வரும் ராஜ நாகத்தின் பெயரையும் மாற்றி தெரிவித்துள்ளனர்.
அதனால் தடையில்லா சான்று கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால் மெர்சல் சொன்னபடி தீபாவளிக்கு வெளிவருமா என சந்தேகம் எழுந்துள்ளது. இருந்தும் தயாரிப்பாளர் எப்படியும் படத்தை குறித்த நேரத்தில் வெளியாக முழு மூச்சில் போராடி வருகிறார் .
