Tuesday, April 28
Shadow

இசை உலகின் பிதாமகன் மைக்கேல் ஜாக்சன் இறந்த தினம் இவரை பற்றிய ஒரு சில வரிகள்

ஆபிரிக்க-அமெரிக்க பாப் இசைப் பாடகர், நடன இயக்குனர், பாடல் ஆசிரியர், தொழில் தலைவர், மற்றும் வள்ளல் எனப் பல முகங்கள் கொண்டவர். புகழ்பெற்ற ஜாக்சன், இசைக் குடும்பத்தில் ஏழாம் பிள்ளை. 1964இல் இவரின் நான்கு உடன்பிறந்தவர்களுடன் சேர்ந்து ஜாக்சன் 5 என்ற இசைக்குழுவில் சேர்ந்தார். பின் 1971 இல் தனியாக பாடத் துவங்கி புகழடைந்தார். கிங் அஃப் பாப் (பாப் இசையின் மன்னர்) என்றும் எம்.ஜெ என்றும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். இவரால் வெளியிடப்பட்ட இசைத்தொகுப்புகளில் ஐந்து உலகெங்கும் பெருமளவில் விற்பனை செய்யப்பட்டதாகும். 1982இல் வெளிவந்த திரில்லர் உலகில் பெருமளவில் விற்பனை செய்யப்பட்ட இசைத் தொகுப்புகளின் பட்டியலில் முதலாம் நிலையில் உள்ளது. உலகெங்கிலும் உள்ள பல தரப்பு மக்களின் நடுவில் நாற்பது ஆண்டு காலமாகப் புகழ்பெற்றவராக வாழ்ந்து வந்துள்ளார்.

பாடல் எழுதி, அதற்கு இசையமைத்து, பாடலுக்கு ஏற்றாற் போல் நடனம் ஆடுவது, இடை இடையே நடிப்பு என அனைத்தும் கலந்த ‘பாப்’ புதிய நடனத்தை படைத்தார்.

1980களின் துவக்கத்தில் பாப் இசை உலகில் புகழ் பெற்ற பாடகரானார். அமெரிக்காவில் முதலாகப் பல மக்கள் செல்வாக்குப் பெற்ற கருப்பின இசைக்கலைஞரானார். இவரின் இசை நிகழ்படங்களை எம்.டி.வி. ஒளிபரப்பு செய்து எம்.டி.வி.யும் புகழடைந்தது. இதனாலும் இசை நிகழ்படம் படைப்பு ஒரு தலைமையான கலை ஆனது. ஜாக்சன் படைத்த ரோபாட், மூன்வாக் போன்ற நடன வகைகளும் பிரபலமானது. இவரின் நடனமாலும் இசையாலும் பல இசை வகைகள் தாக்கம் பெற்றன.

பல சமூக தொண்டுகளுக்கு உலக முழுவதிலும் இசையரங்கு நிகழ்ச்சிகளை நடத்தி நிதியுதவி செய்துள்ளார். ஆனால் குழந்தைகளுடன் உடலுறவு செய்தார் என்று 1993இல் இவர் குற்றம் சாட்டப்பட்டார். இறுதியில் இவர் குற்றமில்லாதவர் என்று தெரிவித்துள்ளது, ஆனாலும் இவர்பற்றிய பொது மக்களின் கருத்துகள் மோசமானது. இன்று வரையும் அமெரிக்கப் பரவலர் பண்பாட்டில் இவர் ஒரு செல்வாக்கு பெற்றவர் ஆவார்.

1996ல் பிரஸ்லி என்ற பெண்ணை மைக்கேல் ஜாக்சன் மணந்தார். பின்னர் 1999ல் டெபோரே என்ற பெண்ணையும் மணந்தார். இரண்டு திருமணங்களுமே மைக்கேல் ஜாக்சனின் அன்னியமான நடவடிக்கைகளால் மணமவிலக்கில் முடிந்தன. மைக்கேல் ஜாக்சனுக்கு பாரிஸ் மைக்கல் காதரின் ஜாக்சன் என்ற மகளும், மைக்கல் ஜோசப் ஜாக்சன் மற்றும் பிரின்ஸ் மைக்கல் ஜாக்சன்-2 என்று இரு மகன்களும் உள்ளனர்.

“திரில்லர்” என்ற பாடல் தொகுப்பு ரசிகர்கள் நடுவில் பெருத்த வரவேற்பை ‌பெற்றது. ஒட்டு மொத்த உலகத்தையும் ஜாக்சனை திரும்பிப் பார்க்க வைத்தது. பல கிராமி விருதுகளையும், அமெரிக்க இசை விருதுகளையும் வாங்கியுள்ளார். கிராமி வாழ்நாள் சாதனையாளர் விருதும் வாங்கியுள்ளார். 75 கோடி தொகுப்புகள் விற்றதற்காகவும், 13 கிராமி விருதுகள் பெற்றும் இரண்டு முறை கின்னஸ் நூலில் இடம் பெற்றார் மைக்கேல் ஜாக்சன்.‘ப்ளாக் ஆர் ஒய்ட்’ என்ற காணொளி ஒரே நேரத்தில் 27 நாடுகளில் ஒளிபரப்பப்பட்டது. 50 கோடி பார்வையாளர்கள் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தார்கள். இன்றுவரை இதுவே உலக அளவில் அதிகப் பார்வையாளர்கள் பார்த்த நிகழ்ச்சியாகும்.

2009, ஜூன் 25 அன்று இவர் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பு காரணமாக இறந்தார் . இதனை லாஸ் ஏஞ்சலஸ் தீயணைப்பு துறை கேப்டன் இச்டீவ் ருடா உறுதிப்படுத்தினார். ஆற்றல்பூர்வமாக இவரின் இறப்பிற்கான காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

சிறந்த பொழுது போக்கு நிகழ்ச்சி வழங்குபவர் என்ற பிரிவில் இவர் உலகில் ஏராளமான விருதுகளை வாங்கியுள்ளார்.

13 கிராமி விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.

இது உலக சாதனைப் புத்தகமான கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

மேலும் இவரது ஆல்பங்கள் பல மில்லியன் டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதும் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது?

அப்பேர்ப்ப்ட்ட – யாராலும் லேசில் மறக்க முடியாத அந்த ஒரிஜினல் நடன்ப் புயல் மறைந்த நாள்