Monday, April 20
Shadow

நடிகர் மாதவனுக்கு திடீர் அறுவைசிகிச்சை

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவுக்கு இறுதிச்சுற்று படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த மாதவனுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இருப்பினும், நல்ல கதையம்சமுள்ள படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வரிசையில் சமீபத்தில் ‘விக்ரம் வேதா’ படத்தில் நடித்தார்.

இப்படம் மாதவனின் நடிப்பு அதிகம் பேசப்பட்டது. இவருடன் விஜய் சேதுபதியும் இணைந்து நடித்திருந்தார். தற்போது கவுதம் மேனன் இயக்க இருக்கும் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் 2ம் பாகத்தில் மாதவன் நடிக்க இருக்கிறார். இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், தோள் புறத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மாதவனுக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அந்த அறுவை சிகிச்சைக்கு பின் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை அவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் அவருக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் கூறி வருகிறார்கள்.