Friday, March 13
Shadow

இதனால் தான் ஸ்ரீதேவி உயிரிழந்தாரா? வேகமாய் பரவும் தகவல்கள்

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக துபாய் சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி (53) மாரடைப்பால் நேற்று முன்தினம் காலமானார். குறைந்த ரத்த அழுத்தத்தால், ஸ்ரீதேவிக்கு மயக்கம் ஏற்பட்டு மயங்கி விழுந்ததாகவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், நடிகை ஸ்ரீதேவியின் பிரேத பரிசோதனை சான்றிதழ் மற்றும் தடயவியல் அறிக்கை இன்று பிற்பகல் வெளியானது. ஓட்டல் அறையின் குளியல் தொட்டியில் உள்ள தண்ணீரில் மூழ்கியதால் ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததாகவும், அவரது மரணத்தில் சதிச்செயல்கள் ஏதும் இல்லை என்றும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், துபாயின் பிரபல ஊடகங்கள் மாறுபட்ட தகவல்களை வெளியிட்டு வருகின்றன. நடிகை ஸ்ரீதேவி மது போதையில் இருந்தபோது குளியல் தொட்டியில் தடுமாறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து இருக்கலாம் என செய்திகள் பரவி வருகிறது. இந்நிலையில், ஸ்ரீதேவியின் உடல் இன்று இந்தியா கொண்டு வரப்படுகிறது.