இனி கவர்ச்சி வேண்டாம் நல்ல கதை தான் என்று முடிவெடுத்து நடிக்க ஆரம்பித்த த்ரிஷாவுக்கு சோதனை மேல் சோதனை தற்போது நடித்து வரும் மோகினி படம் தன் சினிமா வாழ்வில் பெரிய இடத்துக்கு கொண்டு செல்லும் என்ற கவில் இருந்தார் ஆனால் அதில் மண் விழும் கதையாக போச்சு
நாயகி படத்தை தொடர்ந்து நடிகை த்ரிஷா மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு பேய் படத்தில் நடித்து வருகிறார். மோகினி என பெயர் சூட்டப்பட்டுள்ள இப்படத்தை மதுர, அரசாங்கம் படங்களை இயக்கிய மாதேஷ் இயக்குகிறார்.
அண்மையில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நற்பெயரைப் பெற்றுள்ளது. எனினும் இந்த போஸ்டர் அவதார் படத்தை நினைவு படுத்துவதாக சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர். இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் நவம்பர் முதல் வாரத்தில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.