அல்லு அர்ஜுனின் மனைவி என்பதைத் தாண்டி… தனக்கென ஒரு உலகை உருவாக்கிய சினேகா ரெட்டி!
அல்லு அர்ஜுனின் மனைவி என்பதைத் தாண்டி... தனக்கென ஒரு உலகை உருவாக்கிய சினேகா ரெட்டி!
திரையுலகின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுனின் மனைவி என்ற அடையாளம் சினேகா ரெட்டிக்கு ஏற்கனவே பிரபலத்தைத் தேடிக் கொடுத்திருந்தாலும், அதற்குள் மட்டுமே தன்னைச் சுருக்கிக்கொள்ளாமல் தனக்கென ஒரு தனி பாதையை உருவாக்கி வருகிறார் சினேகா.
தொழில்முனைவு, குடும்பம், உடற்பயிற்சி, பயணம், ஃபேஷன் என தனது விருப்பங்களையும் அன்றாட வாழ்க்கையின் அழகான தருணங்களையும் சமூக வலைதளங்கள் வழியாக ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். இதன் மூலம், சினிமா பின்னணி இல்லாமலேயே தனக்கென ஒரு பெரிய டிஜிட்டல் ரசிகர் வட்டத்தையும் உருவாக்கியுள்ளார்.
சினேகா ரெட்டியின் தொழில்முனைவுப் பயணத்தில் முக்கிய இடம் பிடிப்பது ‘பிகாபூ’ (Picaboo) ஸ்டுடியோ. தொழில் சார்ந்த பணிகளில் கவனம் செலுத்துவதோடு, தனது தனிப்பட்ட ஆர்வங்களுக்கும் அவர் தொடர்ந்து முக்கியத்துவம் அளித...
