
நடிகர் அஜித், நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியாகி இந்த வருடத்தின் முதல் ஹிட் படமாக மாறிய படம் விஸ்வாசம். இந்த படம் இதுவரை செய்த சாதனையை வேறு எந்த படமும் முறியடிக்கவில்லை.
இந்நிலையில், இப்படம் மேலும் ஒரு சாதனையை படைத்துள்ளது. அதாவது, விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடல் யூடியூபில் 70 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இதனால் ரசிகர்கள் #70MViewsForKannaanaKanney என்ற டாக்கை டிரண்ட் செய்து வருகின்றனர்.
வரும் ஆகஸ்ட் 8ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நடிகர் அஜீத் நடிக்கும் நேர்கொண்ட பார்வை படம் வசூலில் பெரிய சாதனை படைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
