Friday, April 17
Shadow

சூர்யா பிறந்த நாளை பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கி கொண்டாடிய ரசிகர்கள்

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் தனக்கு என்று ஒரு வழியை வகுத்துள்ளார். படங்களில் நடிப்பதை தாண்டி கஷ்டத்தில் வாழும் குழந்தைகளுக்கு கல்வி உதவி செய்து வருகிறார்.

இதுவரை பல கோடி பேருக்கு கல்வி உதவி செய்துள்ளார், நாமும் அவரது பணியை பார்த்து வருகிறோம். பலரின் கல்விக்கு உதவிய ஒரு பெரிய மனிதருக்கு இன்று பிறந்தநாள், உலகம் முழுவதும் அவரது ரசிகர்கள் பல நல்ல விஷயங்கள் செய்து வருகின்றனர்.

இப்போது கேரளாவில் உள்ள #V100LadiesUnitKollam என்ற ரசிகர் மன்றத்தினர் கொல்லத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் படுக்கையை இலவசமாக இன்று கொடுக்கின்றனராம்.