Monday, April 20
Shadow

பிக் பாஸுக்காக அட்ஜஸ்ட் செய்யும் மும்தாஜ்?

பிக் பாஸ் 2 வீட்டில் உள்ள மும்தாஜ் என்றதும் அவரும் அனைவர் மீதும் அன்பாக இருப்பார் என்று சொல்லும்படி நடந்து கொள்கிறார். மேரி பேட்டி, பேட்டா, பச்சா என்று பாச மழை பொழிவார்.

ஐஸ்வர்யா மீது தற்போது அவருக்கு கூடுதல் பாசம் ஏற்பட்டுள்ளது.ஐஸ்வர்யா இத்தனை வாரங்களாக நாமினேட் ஆகாமல் இருந்ததற்கு பிக் பாஸ் தான் காரணம் என்பதை மும்தாஜ் புரிந்து கொண்டுள்ளார். அதனாலோ என்னவோ கடந்த சில நாட்களாக ஐஸ்வர்யா மீது தனிப் பாசம் வைத்துள்ளார். சில சமயங்களில் ஐஸ்வர்யா மும்தாஜை விரட்டிவிட்டாலும் பின்னர் அவரிடம் தானாகப் போய் பேசுகிறார்.

நாமினேஷனின் போது கூட பிறர் ஐஸ்வர்யாவை நாமினேட் செய்வதற்கான காரணத்தை கூறியதும் மும்தாஜ் அவர் முதுகில் தடவிக் கொடுத்தார். ஐஸ்வர்யா போன் டாஸ்கின்போது சென்றாயனின் அப்பாவித்தனத்தை பயன்படுத்தி அவரை ஏமாற்றியது தெரிந்தும் மும்தாஜ் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வர வர ஐஸ்வர்யா விஷயத்தில் மும்தாஜ் பிக் பாஸ் மாதிரியே நடந்து கொள்கிறார்.