Sunday, May 19
Shadow

முருங்கைக்காய் சிப்ஸ் திரைவிமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

புதுமுக இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள படம் முருங்கைக்காய் சிப்ஸ். இந்தப் படத்தில் சாந்தனு, அதுல்யா ரவி, பாக்கியராஜ், மனோபாலா, ஆனந்தராஜ், மயில்சாமி, யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை லிப்ரா புரொடக்ஷன் சார்பாக ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்திருக்கிறார். முழுக்க முழுக்க இந்த படம் ரொமான்டிக் காதல் திரைப்படமாக உருவாகியுள்ளது. இன்று சாந்தனு நடிப்பில் வெளியாகியுள்ள இந்த படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலம்.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராகவும் இயக்குனராகவும் இருந்தவர் பாக்யராஜ். அவருடைய மகன் சாந்தனுவும் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்து வருகிறார். கடைசியாக இவருடைய நடிப்பில் வெளிவந்த படம் கசடதபற. இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து இவர் முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த படம் புதுமண தம்பதிகளுக்கு இடையே முதலிரவில் நடக்கும் விஷயங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இருக்கிறது.

ஆனால், அதில் ஆபாச காட்சிகள் எதுவும் இல்லை. இரட்டை அர்த்த வசனங்கள் உள்ளதால் மட்டுமே ஏ சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்திருக்கிறார். சாந்தனுவுக்கும், அதுல்யா ரவிக்கும் திருமணம் நடைபெறுகிறது. பின் முதலிரவுக்கு முன் சாந்தனு உடைய தாத்தா பாக்யராஜ் உங்கள் இருவருக்கும் முதலிரவில் உடல் உறவு நடந்தால் பரம்பரை சொத்து முழுவதையும் ஆசிரமத்துக்கு எழுதி வைத்து விடுவேன் என்று கூறுகிறார்.

இன்னொரு பக்கம் அதுல்யாவிடம் அவர் அத்தை ஊர்வசி உங்கள் இருவருக்கும் முதலிரவு நடைபெறவில்லை என்றால் குழந்தை பிறக்காது என்ற தோஷம் இருப்பதாக கூறுகிறார். இதனையடுத்து இருவரும் முதலிரவு நடந்ததா? இல்லையா? என்பதை சொல்லும் படமாக முருங்கைக்காய் சிப்ஸ் அமைந்திருக்கிறது. படம் முழுக்க முழுக்க ஒரே இரவில் நடக்கிறது. படம் முழுவதும் நகைச்சுவை, இரட்டை அர்த்த வசனங்களை அள்ளித் தெளித்திருக்கிறார் இயக்கினார்.

ஆனால், அவற்றில் பெரும்பாலானவை நடைமுறையில் பேசுவது தான். மேலும், படம் பாக்யராஜ் பாணியில் இருப்பதால் மிகவும் பழசாக இருக்கிறது. படத்தின் தொடக்கத்தில் வரும் காட்சிகள் எல்லாம் அப்படியே சீரியலில் வரும் காட்சிகளைப் போலவே இயக்கி இருக்கிறார் இயக்குனர். அதே போல் படத்தில் பல நகைச்சுவை நடிகர்கள் இருந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு காமெடி இல்லை. இதனால் மக்கள் மத்தியில் வெறுப்பு தான் மிஞ்சுகிறது.

மேலும், படத்தில் அதுல்யா மற்றும் சாந்தனு நண்பர்களும் உறவினர்களும் முதலிரவு குறித்து அட்வைஸ் செய்கிறார்கள். அவையெல்லாம் பழைய படங்களில் வந்த டயலாக் ஆகவே இருக்கிறது. படம் முழுவதும் ஒரே அறையில் தான் கதை நகர்கிறது. முடிந்தவரை தனது ஒளிப்பதிவில் ஒளிப்பதிவாளர் நன்றாக செய்து இருக்கிறார். அதேபோல் பின்னணி இசையும் படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. தற்போது இருக்கும் காலக்கட்டத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரிக்கும் நிலையில் உடலுறவு குறித்து பிற்போக்கு தனமான கருத்துக்களை படத்தில் பேசியிருப்பது மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்துகிறது என்று சொல்லலாம்.

படத்தின் பிளஸ்:

படத்தில் நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். ஒளிப்பதிவும், பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலமாக உள்ளது.

படத்தின் மைனஸ்:

தற்போது இருக்கும் காலக்கட்டத்தில் இந்த மாதிரி உடலுறவு குறித்த கருத்துக்கள் மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தி இருக்கிறது. படம் முழுக்க முழுக்க எண்பது 80,90 காலகட்டத்தில் வெளிவந்த படங்கள் பாணியில் அமைந்து இருக்கிறது.

மொத்தத்தில் முருங்கைக்காய் சிப்ஸ் ஒரு முறை பார்க்கலாம் என்ற ரகமே.