Friday, November 7
Shadow

இசையமைப்பாளர் கீரவாணி பிறந்த தின பதிவு 

கொடுரி மரகதமணி கீரவாணி, இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் பாடகர் ஆவார். இவர் எம். எம். கீரவாணி என்று பரவலாக அறியப்படுகிறார். இவர் தெலுங்கு, தமிழ், கன்னட, மலையாள மற்றும் இந்தி திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

இவருக்கு மரகதமணி, வீடநாராயணா, எம். எம். கீரம் போன்ற புனைப்பெயர்கள் உள்ளன. இவருடைய பல பாடல்கள் எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் சித்ரா அவர்களால் பாடப்பெற்றது. 1997ல் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது அன்னமாச்சாரியார் திரைப்படத்திற்காக கிடைத்தது. மேலும் தமிழக அரசு திரைப்பட விருதுகள், ஆந்திர அரசாங்கம் தருகின்ற நந்தி விருது போன்றவற்றை பெற்றுள்ளார்

இவர் தமிழ் சினிமாவில் மரகதமணி என்று அழைக்கப்பட்டார்.

இவர் இசையமைத்ததில் மிக முக்கியமான திரைப்படங்கள் ‘அழகன்’, ‘ நீ பாதி நான் பாதி’ , ‘வானமே எல்லை’ , ‘ஜாதிமல்லி’ ஆகியனவாகும். தெலுங்கில் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பல படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார்.

கீரவாணி 1997 ஆம் ஆண்டு ‘அன்னமையா’ என்ற படத்திற்கு தேசிய விருது பெற்றார். இவர் ஆந்திராவில் வழங்கப்படும் நந்தி விருதுகளை பலமுறை பெற்றிருக்கிறார். தமிழில் ‘அழகன்’ திரைப்படத்தின் இசைக்காக 1991ஆம் ஆண்டு தமிழக அரசின் விருதை பெற்றார். இவர் பல்வேறு பிலிம் ஃபேர் விருதுகளையும் வென்றுள்ளார்.