Wednesday, October 28
Shadow

இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா பிறந்தநாள் இன்று இவரை பற்றிய சில வரிகள்

இவர் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகன் ஆவார். இவரது சகோதார் யுவன் சங்கர் ராஜா மற்றும் சகோதாரி பவதாரிணி ஆகியோரும் இசையமைப்பாளர் மற்றும் பின்னணி பாடகர்களாக உள்ளனர். சென்னையில் படிப்பை முடித்த இவர், ஆந்திராவை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

தனது 13 வது வயதில் நினைக்க தெரிந்த மனமே படத்தில் கண்ணுக்கும் என்ற பாடலுக்கு கீபோர்ட் வாசித்தார். நாயகன் படத்தில் கீபோர்ட் மற்றும் சவுண்ட் டிராக்கை அமைத்து கொடுத்தார்.

அலெக்சாண்டர் என்ற படத்தின் மூலம் முழு இசையமைப்பாளராக மாறிய இவர், உல்லாசம், நாம் இருவர் நமக்கு இருவர், காதலா காதலா மற்றும் டும்டும்டும் ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இவர் தில்லுக்கு துட்டு, அரண்மனை, புதிய கீதை, ராசாமகன், அமைதி படை, சக்கரை தேவன், பொன்னுமணி, உழைப்பாளி, பாண்டியன்

Panchu Arunachalam 70th Birthday Celebration Photos

ஆகிய படங்களில் பின்னணி இசையமைத்துள்ளார்.

ஹிந்தியில் பல ஆல்பங்களை உருவாக்கியுள்ள இவர் தமிழில், காதலி கவுரவிக்கும் நேரம் என்ற ஆல்பத்தை வெளியிட்டுள்ளார்.

இவர் இசையமைத்துள்ள திரைப்படங்கள்

மாணிக்கம், உல்லாசம், அலெக்சாண்டர், நாம் இருவர், நமக்கு இருவர், உள்ளம் கொள்ளை போகுதே, டும் டும் டும், ஆல்பம், ரகசியமாய், குடைக்குள் மழை, நெறஞ்ச மனசு, நாளை, மனதோடு மழைக்காலம், சகாப்தம்