இந்திய திரை இசை உலகில் எஸ்.டி. பர்மன் (தந்தை) மற்றும் ஆர்.டி. பர்மன் (மகன்) என்று சொன்னால் தெரியாதவர்கள் மிகக் குறைவு. அந்த அளவுக்கு, ஹிந்தி திரை இசை உலகில் கொடி கட்டி பறந்தார்கள். இருவருமே
இன்று உயிரோடு இல்லை.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, தமிழர்கள் கூட, மொழி தெரியாவிட்டாலும், ஹிந்தி திரைப்பட பாடல்களை, குறிப்பாக அதன் இசையை ரசித்தார்கள். அப்படிபட்ட இசையை தந்தவர்களுள் ஆர்.டி. பர்மன் குறிப்பிடதக்கவர்.