
இந்திய சினிமா வரலாற்றையே திருத்தி எழுதும் படம் என்றால் அது பாகுபலி 2 என்று சொல்லவேண்டும் இதுவரை இந்திய சினிமாவில் எத்தனையோ ஜாம்பாவான்கள் இருந்தனர் அவர்களால் முடியாத சாதனை நிகழ்த்தியவர் என்றால் அது நம்ம ராஜமௌலி என்று தான் சொல்லணும் இந்திய சினிமா வரலாற்றில் 1௦௦௦ கோடி வசூல் என்பது சாதாரண விஷயம் இல்லை இதை மிக சுலபமாகநிகழ்த்தியவர் ராஜமௌலி
ஆனால் இதை கொண்டாட நேரமில்லாமல் ராஜமௌலி குழுவினர் உலகம் முழுவதும் இப்படத்தின் ப்ரோமோஷனில் கலந்துகொண்டு வந்தார்கள்.
இந்நிலையில் நேற்று நடந்த லண்டன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியுடன் பாகுபலியுடனான தனது பணி முடிவுக்கு வந்திருப்பதாக ராஜமௌலி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
