Sunday, June 21
Shadow

நான் சிரித்தால் திரைவிமர்சனம் (ரேட்டிங் 2.5/5)

மீசையை முறுக்கு, நட்பே துணை படங்களை தொடர்ந்து நடிகர் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் காதலர் தினமான இன்று வெளியாகி உள்ள படம் நான் சிரித்தால். இந்த படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.

ஹீரோ காந்திக்கு (ஹிப்ஹாப் தமிழா ஆதி) ஒரு வித்தியாசமான பிரச்சனை. அதாவது பதட்டமானாலும் சரி, கவலையாக இருந்தாலும் சரி கெக்க பிக்கவென சிரித்துவிடுவார். இதனாலேயே அவர் வாழ்க்கையில் பிரச்சனையோ பிரச்சனை. ஜாலியான காந்திக்கு அங்கிதா (ஐஸ்வர்யா மேனன்) என்று ஒரு காதலி.

ஆதி படத்தில் எப்பொழுதும் ஒரு நண்பர்கள் கும்பல் இருக்கும். இந்த படமும் அதற்கு விதிவிலக்கு அல்ல. அந்த நண்பர்கள் கும்பலில் ஒருவர் காணாமல் போக அவரை தேடிச் செல்லும் ஆதி டில்லி பாபு(கே.எஸ். ரவிக்குமார்), சக்கரை (ரவி மரியா) இடையே நடக்கும் கேங் சண்டையில் சிக்கிக் கொள்கிறார். ஆதி சிரித்து சிரித்து பிரச்சனையில் சிக்குவது தான் கதையே.

ஆதி தான் சிரித்துக் கொண்டே இருக்கிறார். அவரை பார்த்து நமக்கு சிரிப்பு அவ்வளவாக வரவில்லை. கேங் சண்டையும் பெரிதாக ஈர்க்கவில்லை. நட்பு, காதல், குடும்ப சென்டிமென்ட் என்று ஒரு சிறப்பான படத்திற்கான அனைத்தும் இருந்தும் அரைவேக்காடாக உள்ளதால் ருசிக்கவில்லை. காமெடி காட்சிகளில் கூட சிரிப்பு வரவில்லை. ஆதியின் பிரச்சனையை பார்த்து பாவப்படத் தோன்றவில்லை.

அப்பா, மகன் இடையே கெமிஸ்ட்ரி நன்றாக உள்ளது. ஆனால் அது பெரிதாக கை கொடுக்கவில்லை. ஹீரோயின் டம்மி பீஸ். பாடல்கள் இருக்க வேண்டுமே என்று திணிக்கப்பட்டுள்ளது. யோகி பாபு வரும் காட்சிகள் பரவாயில்லை. ஆதியும், நண்பர்களும் அடிக்கும் லூட்டியை பார்க்க நன்றாக உள்ளது.

படத்தின் பிளஸ்: ஆதியின் நடிப்பு, கிளைமேக்ஸ் காட்சிகள்

படத்தின் மைன்ஸ்: படத்தின் முதல் பாதிநீளமாக இருப்பது,
.
மொத்தத்தில் நான் சிரித்தால், கலகலப்பான படம்