Saturday, June 27
Shadow

நாடோடிகள் இரண்டாம் பாகத்தில் சசிகுமாருடன் இணையும் அஞ்சலி

2009ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரகனி இயக்கத்தில் M.சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வசூலில் புரட்சி செய்தது.

மீண்டும் சமுத்திரகனி – M.சசிகுமார் வெற்றி கூட்டணி இணையவுள்ளது. நாடோடிகள் மற்றும் இன்ஸ்பைர் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்க சமுத்திரகனி இயக்கத்தில் M.சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் “நாடோடிகள் 2” திரைப்படம் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

இப்படத்திற்கு இசை ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு என்.கே.ஏகாம்பரம், கலை இயக்கம் – ஜாக்கி, படத்தொகுப்பு – A.L.ரமேஷ்.

இந்த படத்தின் நாயகியாக அஞ்சலி நடிப்பது உறுதியாகியுள்ளது அதோடு முத்த பாகத்தில் நடித்த பரணி மற்றும் சிலர் நடிப்பதும் உறுதியாகியுள்ளது முதல் பகுதி மிக பெரிய வெற்றி என்பதால் இந்த இரண்டாம் பக்கத்துக்கு பெரிய ஒரு எதிர்ப்பார்ப்பு ரசிகரகளிடம் உள்ளது அதோடு அஞ்சலி இந்த படத்துக்கு மேலும் எதிர்ப்பார்ப்பை உண்டுபண்ணியுள்ளார்

Leave a Reply