
மாயமான ஒரு தெரு… உயிர் பிழைப்புக்கான போராட்டம்! – ஆகஸ்டில் திரைக்கு வரும் ‘தி எண்ட் ஆஃப் ஓக் ஸ்ட்ரீட்’
ஒரே இரவில் ஒரு முழு தெருவே உலக வரைபடத்திலிருந்து மறைந்துவிட்டால் என்ன ஆகும்? அந்த தெருவில் வசித்த மக்கள் திடீரென அறிமுகமில்லாத, புரியாத ஒரு இடத்தில் கண் திறந்தால் என்ன செய்வார்கள்? இந்த சுவாரஸ்யமான கேள்விகளுக்கான பதிலாக உருவாகியுள்ளது ஹாலிவுட்டின் புதிய மர்ம அறிவியல்-புனைகதை திரைப்படமான ‘தி எண்ட் ஆஃப் ஓக் ஸ்ட்ரீட்’.
புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஓக் ஸ்ட்ரீட் என்ற தெருவும், அதைச் சுற்றியுள்ள வீடுகளும் மர்மமான விண்வெளி நிகழ்வு ஒன்றின் தாக்கத்தால் முற்றிலும் வேறொரு இடத்திற்கு நகர்த்தப்படுகின்றன. அங்கு சிக்கிக் கொள்ளும் குடும்பங்களுள் ஒன்றான ப்ளாட் குடும்பம், அச்சமும் குழப்பமும் நிறைந்த அந்த சூழலில் உயிர் பிழைக்க போராடுகிறது. அவர்கள் எதிர்கொள்ளும் மர்மங்கள் மட்டுமல்ல, குடும்ப உறவுகளின் வலிமையும் இந்தக் கதையின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.
ஆஸ்கர் விருது பெற்ற நடிகை ஆன் ஹாத்வே மற்றும் புகழ்பெற்ற நடிகர் ஈவன் மெக்க்ரெகர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்தில், இளம் நட்சத்திரங்களான மெய்ஸி ஸ்டெல்லா மற்றும் கிறிஸ்டியன் கான்வெரி ஆகியோரும் முக்கிய வேடங்களில் தோன்றுகின்றனர்.
மர்மம் மற்றும் உளவியல் த்ரில்லர் படைப்புகளுக்காக அறியப்படும் இயக்குநர் டேவிட் ராபர்ட் மிட்ச்செல், இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். திரைப்பட உலகின் முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவரான ஜே.ஜே. ஏப்ரம்ஸ் உட்பட பலர் இணைந்து தயாரித்துள்ளதால், படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
ஒளிப்பதிவு, இசை, கலை வடிவமைப்பு உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்களிலும் பல முன்னணி கலைஞர்கள் பணியாற்றியுள்ளதால், திரையில் ஒரு வித்தியாசமான காட்சியனுபவம் காத்திருக்கிறது.
வார்னர் ப்ராஸ். பிக்சர்ஸ் வழங்கும் இந்த பிரம்மாண்ட திரைப்படம், உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில், இந்தியாவில் 2026 ஆகஸ்ட் மாதம் திரையரங்குகள் மற்றும் ஐமேக்ஸ் வடிவில் மட்டும் வெளியாக உள்ளது.
மர்மம், அறிவியல் புனைகதை, குடும்ப உணர்வுகள் மற்றும் பரபரப்பான திரில்லர் அனுபவத்தை ஒருங்கே வழங்கவுள்ள ‘தி எண்ட் ஆஃப் ஓக் ஸ்ட்ரீட்’, இந்த ஆண்டின் முக்கிய ஹாலிவுட் வெளியீடுகளில் ஒன்றாக கவனம் பெற்று வருகிறது.

A Street Vanishes Without a Trace… A Fight for Survival Begins! – ‘The End of Oak Street’ Arrives in Theatres This August
What would happen if an entire street disappeared from the map overnight? What if the families living there suddenly found themselves transported to a strange and unfamiliar place? These intriguing questions form the foundation of the upcoming science-fiction mystery thriller “The End of Oak Street.”
The film follows the residents of Oak Street, a suburban neighborhood that is mysteriously uprooted and transported to an unknown location following a bizarre cosmic event. Among those trapped is the Platt family, who must navigate a frightening and unpredictable environment while struggling to survive. As they confront the mysteries surrounding them, they discover that staying united may be their only chance of making it through.
Academy Award-winning actress Anne Hathaway and acclaimed actor Ewan McGregor lead the cast, joined by rising stars Maisy Stella and Christian Convery in key roles.
The film is written and directed by David Robert Mitchell, known for his distinctive approach to mystery and psychological storytelling. Adding to the anticipation, the project is produced by an impressive team that includes renowned filmmaker J.J. Abrams, along with Hannah Minghella, Jon Cohen, David Robert Mitchell, Matt Jackson, and Tommy Harper.
With a talented creative team behind the scenes—including cinematographer Michael Gioulakis, production designer Maya Shimoguchi, editor John Axelrad, composer Michael Giacchino, and costume designer Erin Benach—the film promises a visually immersive and emotionally engaging cinematic experience.
Presented by Warner Bros. Pictures and produced by Bad Robot and Jackson Pictures, “The End of Oak Street” is set for a worldwide release. In India, the film will arrive exclusively in theatres and IMAX in August 2026.
Blending science fiction, suspense, family drama, and mystery, “The End of Oak Street” is shaping up to be one of the most anticipated Hollywood releases of the year.
