
ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜீத், விஜய், விக்ரம், சூர்யா மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோருடன் ஜோடியாக நடிக்க நடிகைகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தயாரிப்பாளர்கள், முன்னணி ஹீரோகளுடன் நடிக்கும் நடிகைகளை தேர்வு செய்யும் போது பல்வேறு சாய்ஸ்களை அளிக்கிறார்கள். ஆனால், லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டம் பெற்றுள்ள நயன்தாராவின் ஒரே சாய்ஸ் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடிப்பது மட்டுமே என்று உள்ளது.
நடிகர் அஜீத் உடன் விஸ்வாசம் படத்தில் நடித்ததை தொடர்ந்து, நடிகர் சிவ்கார்த்திகேயனுடன் வேலைக்காரன் படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக மிஸ்டர் லோக்கல் படத்தில் ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார்.
நடிகர் விஜய் உடன் இவர் நடித்த வில்லு படம் தோல்வியடைந்ததை தொடர்ந்து, நயன்தாரா என்றும் விஜய்யின் பேவரைட் ஹீரோயினாக இருக்கவில்லை. இருந்த போதும் தற்போது விஜய் நடிப்பில் வெளியாக உள்ள விளையாட்டை மையமாக கொண்ட படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு அழைப்பு விடப்பட்டது.
இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் – ரஜினிகாந்துடன் முதன்முறையாக இணையும் தர்பார் படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில், கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் நடிக்க நயன்தாராவை அணுகியுள்ளனர். இந்த வாய்ப்பை நயன்தாரா அமைதியாக மறுத்துள்ளார். பொதுவாகவே இயக்குனர் ஷங்கர் படம் நிறைவைடைய நீண்ட நாட்கள் ஆகும். இதுமட்டுமின்றி இந்த படத்தில் நடிக்கும் மற்றொரு நாயகியான காஜல் அகர்வால், சிரஞ்சீவியின் 150-வது படத்தில் நடித்து வருகிறார்.
நடிகை நயன்தாரா பெரிய பட்ஜெட் படத்தில் சும்மா வந்து செல்லும் ஹீரோயினாக இருக்க விரும்பவில்லை. இவரது மார்கெட் குறிந்த பட்சம் 15 கோடியாக உள்ளது. ஒருவேளை இவரது படம் பாக்ஸ் ஆபிஸ்க்கு வந்தால் 20 கோடி வரை சம்பாதிப்பதுடன், சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் வருவாயை பெற்று கொடுக்கும்.
நயன்தாரா நடிகர் அஜித் உடன் ஜோடியாக நடித்த விஸ்வாசம் படம் பெரியளவில் ஹிட் ஆனது. இந்நிலையில் இவர் விஜய் மற்றும் ரஜினிகாந்த் உடன் அவரது அடுத்த படத்தில் நடிப்பார் என்று தெரிகிறது.
