Saturday, February 15
Shadow

ஐரா – திரைவிமர்சனம் (வித்தியாசம்) Rank 3.5/5

நயன்தாராவின் நடிப்பில் உருவாகியுள்ள “ஐரா”படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்புப் பெற்று வருகிறது.

மா மற்றும் லட்சுமி ஆகிய குறும்படங்களை இயக்கிய இயக்குனர் சர்ஜூன் கேஎம், கடந்தாண்டு எச்சரிக்கை என்ற படத்தின் மூலம் அறிமுக இயக்குனராக அறிமுகமானார். தற்போது உணர்ச்சிமிக்க த்ரில்லர் படமான ஐரா படத்தை உருவாகியுள்ளார். படத்தின் கதையை கேட்டவுடன் இப்படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்புக்கொண்டுள்ளார்.

தொடர் வெற்றி நாயகியாக வலம் வரும் நயன்தாராவின் அடுத்த மிக பிரமாண்ட படைப்பு ரசிகர்களிடம் ஒரு மிக பெரிய ஒரு எதிர்பார்ப்பை உண்டுபண்ணியுள்ள ஒரு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்கும் நயன்தாரா இந்த படத்திலும் அதை தொடர்ந்துள்ளார்.குறிப்பாக பவானி பாத்திரத்தில் மீண்டும் தான் ஒரு சிறந்த நடிகை என்பதை நிருபித்துள்ளார். சரி இந்த படத்தில் நடித்த நடிகர்கள் கதையை பற்றி பார்ப்போம்

இந்த படத்தில் நயன்தாரா, கலையரசன், கப்ரில்லா, யோகிபாபு ஜெயபிரகாஷ், செந்தில்குமாரி, அஸ்வந்த் அசோக்குமார், மற்றும் பலர் நடிப்பில் சுந்தரமூர்த்தி சுந்தர இசையில் சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவில் சர்ஜூன் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் ஐரா கதையை பார்ப்போம்

யமுனா (நயன்தாரா) மக்கள் மெயில் என்கிற பத்திரிகையில் பணியாற்றி வருகிறார். அவரது வீட்டில் பெற்றோர் அவருக்கு மாப்பிள்ளை பார்க்க, உடனே வீட்டை விட்டு எஸ்கேப் ஆகிறார்.

வேலையில் இருந்து 2 மாதல் லீவ் போட்டுவிட்டு பொள்ளாச்சியில் இருக்கும் பாட்டி வீட்டுக்கு செல்கிறார். அங்கு பேய் இருப்பது போல காட்டி யூடியூப்-ல சம்பாதிக்கலாம் என பிளான் போட்டு, அவரது பாட்டி மற்றும் யோகி பாபு ஆகியோர்  உதவியுடன் மிகவும் பிரபலமும் ஆகிறார். ஆனால் ஒரு நிஜ பேய் அவரை பயமுறுத்துகிறது.

அதே நேரத்தில் நடிகர் கலையரசன் பவானி என்பவரது பேய் தொடர் கொலைகளை செய்து வருவதை பார்க்கிறார். யமுனாவை கொலை செய்ய முயற்சிப்பதும் அதே பேய் தான்.

பிளாஷ்பேக்கில் பவானி (நயன்தாரா) பிறந்தது முதல் சந்தித்த துயரங்கள் கருப்பு வெள்ளையில் திரையில் வருகிறது. அவர் எப்படி இறந்தார், அவர் ஏன் நயன்தாராவை கொல்ல நினைக்க காரணம் என்ன என்பதை எமோஷனலாக காட்டுகிறது மீதி படம்.

எல்லோருக்கும் சந்தோஷமா வாழனும்னு ஆசைதான். ஆனால் வாழ்க்கையே சந்தோசமா கிடைக்காத ஒருத்திக்கு வாழ்க்கையே ஆசை தான்” போன்ற பல வசனங்கள் ஈர்க்கிறது.

நயன்தாரா ஒட்டுமொத்த படத்தை தாங்கி நிற்கிறார் இரண்டு கதபாதிரதிலும் தன் இயல்பான நடிப்பு மூலம் ரசிகர்களை கவர்கிறார் அவரின் வெற்றி பாதை மீண்டும் தொடர்கிறது

அதேபோல படத்தில் நடித்த அனைவரும் தன் பங்கை உணர்ந்து நடித்து இருகிறார்கள் நயன்தாரா போலவே கலையரசன் ஜெயப்ரகாஷ் குறிப்பாக கேப்ரில்லா ஆகியோர் தன் பங்கை மிக சிறப்பாக வெளிபடுதியுள்ளர்கள்

படத்தின் அடுத்த பிளஸ் இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தி கதை ஓட்டத்துக்கு ஏற்ப அழகியா பின்னணி இசை அதோடு அனைத்து பாடல்களும் ரசிக்க வைக்கிறது

 

படத்தின் பிளஸ் பாயின்ட்கள்

நயன்தாராவின் நடிப்பு, பின்னணி இசை, எடிட்டிங்.

மைன்ஸ் பாயின்ட்கள்

வழக்கமான பேய் படங்களில் உள்ளதை போன்று பேய் வருவதை காட்ட மெழுகுவர்த்தி அனைவது, கதவு தானாக திறப்பது போன்றவைகள் படத்தின் மைன்ஸ் பாயின்ட்களாகவே உள்ளன.

 

மொத்தத்தில்,  ஐரா உணர்ச்சிமிக்க த்ரில்லர் உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.