Friday, April 17
Shadow

திகில் கிளப்பும் காஞ்சனா 3 ட்ரைலர் விமர்சனம்

காஞ்சனா 3 படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை பரபரப்பாகி வருகிறது. இந்த டிரைலர் வழக்கமான திகில் பட டிரைலரை போன்று இல்லாமல் மிகவும் மிரட்டாலக வந்துள்ளது, தொடக்கத்திலேயே நில ஒளியில் கேட்டை ஒன்று காட்டப்படும் காட்சிகளே மிரட்டலாக இருக்கிறது. தொடர்ந்து ஒரு ரத்த கறையுடன் கூடிய கை, தனியாக ஒரு நாற்காலி இருப்பது போன்றவை ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டு வகையில் உள்ளது. கோவில் முன்பு ஒரு கார் வெடித்து சிதறுவது, அதை தொடர்ந்து பேய் சோபாவில் பறந்து வருவது மிரட்டலில் உச்சமாகவே இருக்கிறது. அதை தொடர்ந்து வரும் காட்சிகள் திகிலை கில்ப்புவதுடன், மாந்திரிக காட்சிகளும் படத்துக்கு கூடுதல் பலத்தை கொடுப்பதாகவே உள்ளது. காளி சிலை அதை தொடர்ந்து வரும் ராகவா லாரன்ஸ் பாடல் காட்சியில் மாடு, குதிரைகள் வீட்டை உடைத்து உள்ளே வரும் காட்சிகள் அதை தொடர்ந்த சண்டைகாட்சிகள் முழுமையான பேய் படம் என்பது உணர்த்தும் வகையில் உள்ளது.

அதை தொடர்ந்து எனக்கு ஒன்னுனா விட்டுட்டு போவேன், என் பசங்களுக்கு ஒன்னுனா வெட்டிட்டு போவேன் என்று ராகவா லாரன்ஸ் பேசும் பஞ்ச் படத்தின் கதையை பற்றி யோசிக்க வைக்கிறது. தொடர்ந்து நீ இருக்குற இடம் தெரியாமல் அழிஞ்சுடுவ என்று வில்லன் பேசுவது, நெருப்ப தொடலாம்டா கருப்ப தொடக் கூடாது என்று ராகவா லாரான்சின் பதில்கள் ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது. என் மாஸ் தெரியாம பேரு என்று வில்லன் சொல்வதும் நீ மாஸ்னா நான் டபுள் மாஸ் என்று ராகவா ராலரன்ஸ் பேசும் வசனங்களும் ரசிகர்களின் கைத்தட்டலை அள்ளும் என்பதில் சந்தேகமில்லை.

தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமைகளை கொண்டவர் ராகவா லாரன்ஸ், ஓவியா, வேதிகா ஆகியோருடன் இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இப்படம் ஏப்ரல் 19-ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாக இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது