Thursday, April 25
Shadow

ரசிகர்களை மிரட்ட போகும் செல்வராகவன்

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்செல்வராகவன். இவரதுஇயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’
நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த இப்படம் ஜூன் 30ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கியிருக்கும படம் இது.பத்து வருடங்களுக்குப் பிறகு செல்வராகவன் – யுவன்ஷங்கர் ராஜா கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும்படம் என்பதால் சினிமா ரசிகர்கள் மத்தியில் இப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

செல்வராகவன் தனது வழக்கமான திரைக்கதை போக்கில் இருந்து முதல் முறையாகபேய் கதையை படமாக்கி இருக்கிறார். பேய்க் கதைதான் என்றாலும் இதுவரை தமிழ் சினிமாவில் வராத ஒரு பேய் கதையை செல்வராகவன் படமாக்கியிருக்கிறார் என படம் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

எந்த நடிகர் நடித்து இருந்தாலும்செல்வராகவன் இயக்கும் படங்களுக்கு எப்போதும் தியேட்டரில் முதல் நாள் ஓபனிங்உண்டு.‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் மறக்க முடியாத ஒரு அனுபவத்தை தமிழ் ரசிகர்களுக்கு கொடுக்கும் என்கிறார்கள் படக்குழுவினர்.

நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை திருநெல்வேலி பகுதி திரைப்பட விநியோகஸ்தர் ஸ்ரீராஜ் பிலிம்ஸ் சுப்புராஜ் வாங்கி வெளியிடுகிறார்.

Leave a Reply