செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘என்ஜிகே’ படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் சூர்யா, சாய் பல்லவி உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில், படக்குழுவில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் ஒப்பந்தமாகியிருந்த எடிட்டர் ஜி.கே.பிரசன்னாவுக்கு பதிலாக தேசிய விருது பிரபலம் பிரவீன்.கே.எல் படக்குழுவில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் பிரீத்திசிங் நடிக்கின்றனர். தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு வில்லனாக நடிக்கிறார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்த படத்தை முடித்த பிறகு சூர்யா அடுத்ததாக கே.வி.ஆனந்த் மற்றும் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.