
கதாநாயகியாக மட்டுமல்ல… கதாபாத்திரங்களால் பேச விரும்பும் நிதி அகர்வால்!
தென்னிந்திய திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி வரும் நடிகை நிதி அகர்வால், தனது அடுத்தகட்ட பயணத்தை மிகவும் கவனமாகத் திட்டமிட்டு வருகிறார். முன்னணி நடிகர்களுடன் இணைந்து பிரம்மாண்டமான திரைப்படங்களில் நடித்துள்ள அவர், இனி தேர்வு செய்யும் கதைகள் மற்றும் கதாபாத்திரங்கள் மூலமாக தனது நடிப்புத் திறனை மேலும் வெளிப்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார்.
இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் என வெவ்வேறு மொழித் திரைப்படங்களில் பணியாற்றி வரும் நிதி அகர்வால், ஒவ்வொரு படமும் தனது திரைப்பயணத்தில் புதிய அனுபவத்தை வழங்குவதாகக் கருதுகிறார். குறிப்பாக, ஒரு திரைப்படத்தின் பிரம்மாண்டத்தை மட்டுமே கருத்தில் கொள்ளாமல், அதில் தனக்கான கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தையும் அவர் கவனத்தில் கொண்டு வருகிறார்.
சமீபத்தில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான ஹரி ஹர வீர மல்லு மற்றும் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள தி ராஜா சாப் உள்ளிட்ட படங்களில் பணியாற்றியிருக்கும் நிதி அகர்வால், ஒரே காலகட்டத்தில் இரண்டு படங்களின் படப்பிடிப்பு பணிகளையும் திட்டமிட்டு மேற்கொண்டுள்ளார். தொடர்ந்து பணியாற்றுவதும், தன்னை பிஸியாக வைத்திருப்பதும் தனக்கு பிடித்தமானது என அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நிதி அகர்வால் கூறுகையில், “எனது இலக்குகள்தான் என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்துகின்றன. இயல்பிலேயே நான் கடினமாக உழைக்க விரும்புபவள். நான் எங்கு செல்ல வேண்டும் என்று நினைக்கிறேனோ, அந்த இடத்தை அடைவதற்காக தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும்,” என்றார்.
இனி வரும் காலங்களில் வெவ்வேறு மொழிகளில் மட்டுமல்லாமல், பல்வேறு களங்களிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதில் நிதி அகர்வால் ஆர்வமாக உள்ளார். முன்னணி நடிகர்களின் படங்களில் இடம்பெறுவது மட்டுமே தனது நோக்கம் அல்ல என்றும், அந்தப் படங்களில் தனக்கான கதாபாத்திரம் ரசிகர்களால் கவனிக்கப்படும் வகையில் இருக்க வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார்.
“படத்தின் பிரம்மாண்டம் மட்டுமல்ல… கதையும் கதாபாத்திரமும் முக்கியம்” என்ற அணுகுமுறையுடன் கதைகளைத் தேர்வு செய்யும் நிதி அகர்வால், ஒரு நடிகையாக தனது திறமையை வெளிப்படுத்தக்கூடிய கதாபாத்திரங்களை எதிர்பார்த்து வருகிறார். குறிப்பாக, நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் மற்றும் வலுவான கதாபாத்திரங்களுக்கு தமிழ் சினிமாவில் அதிக வாய்ப்புகள் இருப்பதாக அவர் நம்புகிறார்.
தமிழ் சினிமாவில் தனக்கான அடுத்தகட்டத்தை உருவாக்கும் ஆர்வத்துடன் இருக்கும் நிதி அகர்வால், ரசிகர்களின் நினைவில் நீண்ட காலம் நிலைத்திருக்கும் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதையே தனது முக்கிய விருப்பமாகக் கொண்டுள்ளார்.
திரையில் தோன்றுவது மட்டுமல்லாமல், தனது கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே நிதி அகர்வாலின் தற்போதைய இலக்காக உள்ளது. இதன் மூலம் தென்னிந்திய சினிமாவில் கவனம் பெறும் நடிகைகளில் ஒருவராக மட்டுமல்லாமல், தனது நடிப்பால் அடையாளம் காணப்படும் நடிகையாக உருவெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார்.
For Project Enquiries:
9094035885 – Linda Alexander
9500064027 – PV Baskar

Nidhi Agerwal Aims to Make Her Mark as a Leading South Indian Actress with Stronger Roles!
Actress Nidhi Agerwal is steadily carving a niche for herself in the South Indian film industry and is now entering an important phase of her career. Having worked alongside some of the leading stars of Indian cinema, she is looking forward to taking her journey to the next level with carefully chosen films and impactful characters.
For Nidhi Agerwal, success is not merely about being part of a larger number of films. She believes that the journey of growing as an actress, the effort she puts in, and the opportunities that allow her to showcase her abilities are equally important.
Nidhi has already demonstrated her commitment and ability to handle demanding schedules. During the making of Hari Hara Veera Mallu and The Raja Saab, she successfully managed shooting schedules for both films. She has also expressed that she enjoys staying busy and constantly challenging herself through her work.
Speaking about her ambitions, Nidhi Agerwal said, “My goals are what keep me motivated. I am naturally someone who believes in working hard. I know that if there is somewhere I want to reach, I have to keep working towards it consistently.”
As she looks ahead, Nidhi is keen to explore different languages, genres and characters that can help her evolve as an actress. While she has been part of big-ticket films featuring leading stars, she does not want to restrict herself to roles that merely have a presence in a large-scale production.
For Nidhi, the scale of a film is important, but the story and the significance of her character matter just as much. She is looking for well-written stories and substantial roles that will allow her to demonstrate her acting abilities and create a lasting impression among audiences.
Tamil cinema is also an important part of Nidhi Agerwal’s plans for the future. Having worked across Hindi, Telugu and Tamil films, she considers the experience of being part of different film industries an enriching one. Her recent association with Pawan Kalyan in Hari Hara Veera Mallu and Prabhas in The Raja Saab has brought further attention to her career, and she is now looking forward to taking up similarly interesting and meaningful roles in Tamil cinema.
For Nidhi Agerwal, acting is not simply about appearing on screen. She wants to be remembered for distinctive characters and performances that remain with audiences for a long time. With her focus firmly on exploring challenging roles and diverse stories, Nidhi is looking to establish herself as an actress who is recognised not just for the films she is part of, but for the characters she brings to life.
For Project Enquiries:
9094035885 – Linda Alexander
9500064027 – PV Baskar
