‘அன்பில் அவன்’ படத்திற்கு அதிகரிக்கும் வரவேற்பு – ரசிகர்கள், பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவித்த படக்குழு
‘அன்பில் அவன்’ படத்திற்கு அதிகரிக்கும் வரவேற்பு – ரசிகர்கள், பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவித்த படக்குழு
அக்டோபர் 2-ம் தேதி உலகம் முழுவதும் வெளியான ‘அன்பில் அவன்’ திரைப்படம் ரசிகர்களிடையே தொடர்ந்து கவனம் பெற்று வருகிறது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், ரசிகர்களின் வாய்மொழி பாராட்டால் திரையரங்குகளில் படம் தொடர்ந்து நல்ல வரவேற்புடன் ஓடி வருகிறது. இதையடுத்து, படத்திற்கு ஆதரவளித்த ரசிகர்கள் மற்றும் பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் படக்குழு சார்பில் தேங்க்ஸ் கிவிங் மீட் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் கார்த்திகேயன், பத்திரிகை மற்றும் ஊடகங்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்ததுடன், படம் தற்போது லாபகரமான நிலையை எட்டியுள்ளதாக கூறினார். பல திரைப்படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகியுள்ள நிலையிலும், ‘அன்பில் அவன்’ படத்திற்கு திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரி...








