Saturday, October 12
Shadow

மீண்டும் இணைவார்களா ஆர்யா மற்றும் நயன்தாரா

ஆர்யாவின் கேரியரிலேயே மிகப்பெரிய ஹிட் என்றால் அது பாஸ் என்கிற பாஸ்கரன் படமும், ராஜாராணி படமும் தான். இந்த இரண்டிலுமே நயன்தாராதான் ஹீரோயின்.

இப்போது மஞ்சப்பை ராகவன் இயக்கத்தில் கடம்பன் படத்தில் நடித்துவரும் ஆர்யா அடுத்து அமீர் இயக்கத்தில் ஒரு பீரியட் படத்தில் நடிக்கவிருக்கிறார்.

சர்வதேச அளவில் நடப்பதுபோல கதை அமைந்திருந்தாலும் இது ஒரு பீரியட் படம் என்கிறார்கள். படத்திற்கு இப்போதைக்கு சந்தன தேவன் என்று பெயர் வைத்திருப்பதாக ஒரு செய்தி வருகிறது.

இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் கேட்டிருக்கிறார்கள். ஆர்யாவும் நயன்தாராவும் ஒரு காலத்தில் நகமும் சதையுமாக இருந்தவர்கள். ஆர்யாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

நயன்தாராவோ புதிய காதலர் விக்னேஷ் சிவனுடன் வலம் வருகிறார். எனவே நயன் ஆர்யாவுடன் நடிக்க யோசித்திருக்கிறார்.

ஆனால் அமீர் சொன்ன கதையைக் கேட்டவுடன் அதில் தனக்கு இருக்கும் ஸ்கோப்பை அறிந்து முடிவெடுக்க கால அவகாசம் கேட்டிருக்கிறாராம். செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் ஷூட்டிங் தொடங்கவிருப்பதால் இருவரும் இணைவார்களா என்பது இந்த வாரம் தெரிந்துவிடும்.

Leave a Reply