Sunday, May 25
Shadow

ரஜினி ரஞ்சித் மீண்டும் இணையும் படத்தை பற்றிய அதிர்ச்சி தகவல்கள்

இந்த ஆண்டின் மிக பெரிய வெற்றி படம் என்றால் அது கபாலி தான் ரஜினிகாந்த் ராதிகா அப்தே அட்டகத்தி தினேஷ், கலையரசன், லிங்கேஸ், தன்ஷிகா ஜான் விஜய் மற்றும் பலர் நடிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் வெற்றி பேட்டர படம் அது மட்டும் இல்லாமல் வசூலில் சாதனை புரிந்த படம் கிட்டத்தட்ட3௦௦ கோடிக்கும் மேல் வசூல் ஆனதாக தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ தகவல்கள் இந்த வெற்றியை தொடர்ந்து ரஜினி 2.O படபிடிப்பில் கலந்து கொள்ளவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தபோது சிறிது காலம் ஓய்வு எடுத்துகொண்டார் , செப்டம்பர் மாதம் 2.O படபிடிப்பில் கலந்து கொள்ளவார் என்று சொல்லப்பட்டது. ஆனால் நேற்று அதிரடி அறிவிப்பை தனுஷ் அறிவித்தார்.

மீண்டும் ரஜினி ரஞ்சித் கூட்டணியில் நான் படம் தயாரிக்க போகிறேன் என்று யாரும் எதிஎர்பார்க்கதநிலையில் இந்த அறிவிப்பு கோலிவுட்யே திணறடித்தது இது கபாலி இரண்டாம் பாகம் என்றும் ஒரு சிலர் கூறினார். ஆனால் இந்த கூட்டணி மீண்டும் இணையும் இந்த படம் கபாலி 2 இல்லையாம் முற்றிலும் புது கதையாம் ரஜினியும் ரஞ்சித்தும் கலந்துரையாடலில் பிறந்த கதையாம் ரஜினியை முற்றிலும் யாரும் பார்க்காத மென்மையான கதையாம் இப்படி ஒரு கதை கிடைத்தவுடன் மீண்டும் இணையும் இந்த கூட்டணி என்று தெரிந்தவுடன் யார் தயாரிப்பாளர் என்று யோசித்தபோது ரஜினியின் மனசுக்கு மிகவும் பிடித்த தனுஷ் என்று ரஜினியே ஆசைப்பட்டுள்ளார்.

Leave a Reply