Saturday, April 18
Shadow

மீண்டும் இணையும் தமிழ் சினிமாவின் வெற்றி கூட்டணி சூர்யா மற்றும் இயக்குனர் ஹரி

தமிழ் சினிமாவில் வெற்றி கூட்டணி என்று சொன்னால் அது விறல் விட்டு என்னும் அளவுக்கு தான் உள்ளனர். அதி ஒரு சிறந்த அதிரடி கூட்டணி என்றால் அது சூர்யா மற்றும் இயக்குனர் ஹரி என்று சொன்னால் மிகையாகாது. சூர்யா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த இயக்குனர் என்றாலும் அது ஹரி மீண்டும் இத கூட்டணி இணைகிறது என்றதும் பலருக்கு இருக்கும் ஒரே கேள்வி சிங்கம் 4 என்று ஆனால் இல்லை இது வேறு ஒரு கதை களம்.

ஹரி இயக்கத்தில் ஆறு, வேல், சிங்கம், சிங்கம்-2, சிங்கம்-3 படங்களில் நடித்துள்ளார் சூர்யா. இந்நிலையில் சாமி-2 வைத் தொடர்ந்து மீண்டும் ஹரி இயக்கும் படத்தில் நடிக்கபோகிறார் அவர்.

இதுகுறித்து ஹரி அளித்துள்ள ஒரு பேட்டியில், எனது அடுத்த படத்தில் சூர்யா நடிக்கிறார். சென்ட்டிமென்ட் கலந்த அதிரடி கதையில் படம் உருவாகிறது. வேல் படத்தை விட கூடுதல் சென்ட்டிமென்ட் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
தற்போது, என்ஜிகே, கே.வி.ஆனந்த் படங்களில் நடித்து வரும் சூர்யா, அதன்பிறகு இறுதிசுற்று சுதா இயக்கும் படத்திலும், அதையடுத்து, ஹரி படத்திலும் நடிக்க உள்ளார்.