Saturday, February 15
Shadow

மீண்டும் மீண்டும் சாதனை பட்டியலில் விஜயின் மெர்சல்

மெர்சல் படம் ஆரம்பித்தநாள் முதலே சாதனை என்ற பட்டியலில் தான் முதல் இடம் பிடித்தது இதனால் என்னவோ படத்துக்கு பல பிரச்சனைகள் இருந்தும் இவை அனைத்தும் கடந்து மீண்டும் சாதனை என்ற ஒரே பெயருக்கு சொந்தமான விஜய் மீண்டும் மீண்டும் சாதனை செய்து கொண்டே போகிறார் என்று தான் சொல்லணும்

படம் ரிலிஸுக்கு முன்பாக பல சாதனைகளை நிகழ்த்திய விஜயின் ‘மெர்சல்’ ரிலிஸிற்கு பிறகு மிகப்பெரிய சோதனையை சந்தித்தாலும், அதுவும் படத்திற்கு சாதகமாக முடிந்ததால், விஜய், தயாரிப்பாளர் உள்ளிட்ட ஒட்டு மொத்த ‘மெர்சல்’ குழு ஹாப்பியாக உள்ள நிலையில், மேலும் அவர்களை ஹாப்பியாக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது, மெர்சல் படத்தின் பாடல்கள் ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கில் புதிய சாதனை படைத்திருக்கிறதாம். தமிழ்ப் படங்களில் அதிவேகமாக 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்த முதல் திரைப்படம் என்ற சாதனையை ‘மெர்சல்’ பெற்றுள்ளது.

இது குறித்து சோனி மியூசிக் நிறுவனத்திடம் விசாரித்தததுற்கு, தமிழகத்தில் மட்டும் அல்ல, தென்னிந்திய திரைப்படங்களிலேயே ஆன்லைன் ஸ்டீமிங்கில் ஒரு திரைப்படத்தின் பாடல்கள் 100 மில்லியன் ரசிகர்களை கடந்தது என்றால், அது மெர்சல் தான் என்கிறார்கள்.

விஜயின் ‘மெர்சல்’ நிகழ்த்தியிருக்கும் இந்த புது சாதனையால் விஜய் ரசிகர்கல் செம ஹாப்பியாம்.

Leave a Reply