
ஒரு வாய்ப்பு… ஐந்து வெற்றிக் கதைகள்! 20 ஆண்டுகளாக இசைக் கனவுகளுக்கு உயிர் கொடுக்கும் சூப்பர் சிங்கர்!
சாதாரணப் பின்னணியில் இருந்து வந்தவர்களையும் சாதனைப் பாடகர்களாக மாற்றிய மேடை; முன்னாள் போட்டியாளர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த மாற்றங்களைப் பதிவு செய்யும் ஐந்து புதிய விளம்பரப் படங்கள் – நவம்பர் 21-ல் தொடங்குகிறது சூப்பர் சிங்கர் சீசன் 12!
சென்னை, நவம்பர் xx, 2026:
ஒரு காலத்தில் குடும்பத்திற்காகத் தண்ணீர் கேன்களை விநியோகித்தவர் இன்று பின்னணிப் பாடகர்! கிராமத் திருவிழாக்களில் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி வந்த தம்பதியினர் இன்று சர்வதேச மேடைகளில் நிகழ்ச்சி நடத்துபவர்கள்! இசையின் மீது கொண்ட ஆர்வத்தை மட்டுமே மூலதனமாகக் கொண்டு வந்தவர்கள், இன்று திரையிசை உலகில் தங்களுக்கென ஓர் இடத்தைப் பிடித்திருக்கிறார்கள். இத்தகைய பல கனவுகளுக்கு அடையாளமும் அங்கீகாரமும் கொடுத்த மேடையாகத் தொடர்ந்து பயணித்து வருகிறது ‘சூப்பர் சிங்கர்’.
தமிழ் தொலைக்காட்சி இசை நிகழ்ச்சிகளில் தனக்கென ஒரு நீண்ட பயணத்தைக் கொண்டுள்ள சூப்பர் சிங்கர், இந்த ஆண்டு தனது 20 ஆண்டுகாலப் பயணத்தைக் கொண்டாடுகிறது. இதன் ஒரு பகுதியாக, நிகழ்ச்சியின் மூலம் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கிய ஐந்து முன்னாள் போட்டியாளர்களின் வெற்றிப் பயணங்களை மையமாகக் கொண்டு ஐந்து சிறப்பு விளம்பரப் படங்களை ஸ்டார் விஜய் மற்றும் ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளன.
‘ஒரு குரல் போதும், வாழ்க்கை மாறும்’ என்ற கருத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த விளம்பரப் படங்கள், திவாகர், சத்யபிரகாஷ், சிவாங்கி, செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி மற்றும் பிரியங்கா என்.கே. ஆகியோரின் வாழ்க்கையில் சூப்பர் சிங்கர் ஏற்படுத்திய மாற்றங்களைப் பதிவு செய்கின்றன.
தேநீர்க் கடையில் ஒலித்த குரல் திரையிசை வரை சென்ற கதை!
திவாகரின் வாழ்க்கைப் பயணம் பலருக்கும் உத்வேகம் அளிக்கக்கூடியது. குடும்பத்தின் பொருளாதாரச் சூழலைச் சமாளிக்கத் தண்ணீர் கேன்களை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அவர், ஓய்வு நேரங்களில் அப்பகுதி தேநீர்க் கடையில் திரைப்படப் பாடல்களைப் பாடி வந்தார். முறையான இசைப் பயிற்சி இல்லாவிட்டாலும், பாடகராக வேண்டும் என்ற கனவு மட்டும் அவரிடம் உறுதியாக இருந்தது. அந்தக் கனவுக்கு அடையாளம் கொடுத்ததுடன், பின்னணிப் பாடகராகும் வாய்ப்பையும் அவருக்குத் திறந்துவைத்தது சூப்பர் சிங்கர் மேடை.

முதல் தலைமுறை இசைக் கலைஞருக்கு கிடைத்த அங்கீகாரம்!
சத்யபிரகாஷைப் பொறுத்தவரை, சூப்பர் சிங்கர் அவரது இசைப் பயணத்தில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. முதல் தலைமுறை இசைக் கலைஞராகத் தனது பயணத்தைத் தொடங்கிய அவர், நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி வெற்றிகரமான பின்னணிப் பாடகராக உயர்ந்தார். தொடர்ந்து தனது திறமையை நிரூபித்த அவர், சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதையும் பெற்றுள்ளார்.
கிராமிய இசையிலிருந்து உலக மேடைகள் வரை!
செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி தம்பதியினரின் கதை, நாட்டுப்புற இசையின் வலிமையையும் விடாமுயற்சியையும் எடுத்துக்காட்டுகிறது. ஒரு காலத்தில் கிராமத் திருவிழாக்களில் பாடுவதற்காக மினி லாரிகளில் பல மணி நேரம் பயணம் செய்த இந்தத் தம்பதியினர், தங்களது இசைக்குத் தகுந்த அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தனர். சூப்பர் சிங்கரின் நாட்டுப்புற இசைக்கான தேர்வுச் சுற்று அவர்களுக்கு ஒரு முக்கியமான வாய்ப்பாக அமைந்தது. அதன் பின்னர் பின்னணிப் பாடகர்களாக உயர்ந்ததுடன், உலகின் பல்வேறு நாடுகளிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
பாடகியாகத் தொடங்கி பன்முகக் கலைஞராக உயர்ந்த சிவாங்கி!
சிவாங்கியின் பயணமும் சூப்பர் சிங்கர் மேடையின் மற்றொரு பரிமாணத்தை வெளிப்படுத்துகிறது. நிகழ்ச்சியின் மூலம் தனது இசைத் திறமையை வெளிப்படுத்திய அவர், பின்னர் தனது தனித்துவமான நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்குத் திறமைகளாலும் ரசிகர்களிடம் பிரபலமானார். ஒரு பாடகராகத் தொடங்கிய அவரது பயணம், பன்முகத் திறமை கொண்ட பொழுதுபோக்குக் கலைஞராக அவரை அடையாளப்படுத்தியுள்ளது.
ஒரு இசை நிகழ்ச்சி… வாழ்க்கையின் திருப்புமுனை!
பிரியங்கா என்.கே.வின் கதையும் இந்தப் பிரச்சாரத்தில் இடம்பெற்றுள்ளது. அவரது இசைப் பயணத்தில் அமைந்த ஒரு சிறப்பான இசை நிகழ்ச்சி, எதிர்காலத்திற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கிய முக்கியமான தருணமாக அமைந்தது. அந்த அனுபவம் அவரது இசைப் பயணத்தில் ஏற்படுத்திய மாற்றத்தை இந்த விளம்பரப் படம் உணர்வுபூர்வமாக எடுத்துரைக்கிறது.
இந்த ஐந்து கதைகளும் வெவ்வேறு பின்னணிகள், வெவ்வேறு வாழ்க்கைச் சூழல்கள் கொண்ட மனிதர்களின் பொதுவான கனவான இசை மீதான ஆர்வத்தை முன்னிறுத்துகின்றன. திறமை எங்கிருந்தாலும் அதைக் கண்டறிந்து, அதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தால் வாழ்க்கையில் எத்தகைய மாற்றம் நிகழும் என்பதற்கு இந்தப் பயணங்கள் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன.
கடந்த 20 ஆண்டுகளில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் 100-க்கும் மேற்பட்ட பாடகர்கள் அடையாளம் காணப்பட்டு, இசைத்துறையில் தங்களுக்கான இடத்தை உருவாக்கியுள்ளனர். அவர்களில் பலர் முன்னணி திரைப்படங்களில் பின்னணிப் பாடகர்களாகவும், பிரபல இசையமைப்பாளர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களாகவும் வளர்ந்துள்ளனர்.
இருபது ஆண்டுகால அனுபவத்துடன் அடுத்த தலைமுறை இசைத் திறமைகளைத் தேடும் பயணத்தில் சூப்பர் சிங்கர் தற்போது தனது 12-வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது. ‘சூப்பர் சிங்கர் சீசன் 12 – நியூ ஏஜ்’ என்ற பெயரில் புதிய வடிவத்துடன் உருவாகும் இந்த சீசன், இன்றைய தலைமுறையின் இசை ரசனைக்கும் மாறிவரும் இசை உலகின் போக்குகளுக்கும் ஏற்ப புதிய குரல்களையும் திறமைகளையும் அறிமுகப்படுத்தவுள்ளது.
நவம்பர் 21 முதல் புதிய இசைப் பயணம்!
சூப்பர் சிங்கர் சீசன் 12 – நியூ ஏஜ் நிகழ்ச்சி நவம்பர் 21ஆம் தேதி முதல் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் மாலை 6.30 மணிக்கு ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இதனை ஜியோஹாட்ஸ்டார் தளத்திலும் கண்டு ரசிக்கலாம்.
நிகழ்ச்சி குறித்த புதிய அறிவிப்புகள் மற்றும் தகவல்களுக்கு ஸ்டார் விஜய் மற்றும் ஜியோஹாட்ஸ்டார் தமிழின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களைப் பின்தொடரலாம்.
ஜியோஹாட்ஸ்டார் பற்றி
மாதந்தோறும் சராசரியாக 500 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ள ஜியோஹாட்ஸ்டார், 3,00,000 மணி நேரத்திற்கும் அதிகமான உள்ளடக்கங்களைக் கொண்ட உலகின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்றாகும். திரைப்படங்கள், ஒரிஜினல் தொடர்கள், நேரடி விளையாட்டு ஒளிபரப்புகள், நேரலை நிகழ்வுகள், அனிமேஷன் மற்றும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் எனப் பல்வேறு வகையான பொழுதுபோக்கு அம்சங்களை 19 மொழிகளில் வழங்கி வருகிறது. மேலும், ஜியோஸ்டார் நெட்வொர்க்கின் 100-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்களின் நிகழ்ச்சிகளையும் இந்தத் தளத்தில் காணலாம்.

One Opportunity, Five Inspiring Journeys! Super Singer Celebrates 20 Years of Turning Musical Dreams into Reality
From humble beginnings to the world of playback singing, Star Vijay and JioHotstar celebrate five inspiring success stories as Super Singer Season 12 – New Age gears up for its grand launch on November 21.
Chennai, November XX, 2026: A water-can delivery worker who dreamed of becoming a playback singer, a folk-singing couple who travelled from village festivals to international stages, and aspiring musicians who went on to establish themselves in the entertainment industry – their journeys have one common turning point: Super Singer.
Celebrating two decades of discovering and nurturing musical talent, the popular singing reality show is marking its 20-year milestone by revisiting the inspiring journeys of five former contestants whose lives took a new direction through the platform. Star Vijay and JioHotstar have unveiled five special promotional films featuring the success stories of Diwakar, Sathya Prakash, Sivaangi, Senthil Ganesh and Rajalakshmi, and Priyanka NK.
Built around the powerful message, ‘One Voice Can Change a Life’, the campaign highlights how a single opportunity on the Super Singer stage can open doors to an entirely new world of possibilities.
From delivering water cans to becoming a playback singer
Diwakar’s journey is a reminder that talent can emerge from anywhere. At a time when he was delivering water cans to support his family, he would spend his spare time singing film songs at a neighbourhood tea shop. Despite having no formal musical training, he held on to his dream of becoming a playback singer. Super Singer became the platform that brought his talent into the spotlight and helped him move closer to his ambition.
Sathya Prakash’s journey from a first-generation musician
For Sathya Prakash, Super Singer played a significant role in shaping his musical career. Coming from a first-generation musical background, he used the opportunities provided by the show to establish himself as a successful playback singer. His journey went on to earn him the Tamil Nadu State Film Award for Best Male Playback Singer, marking a significant achievement in his career.
From village festivals to international stages
The story of Senthil Ganesh and Rajalakshmi celebrates the enduring appeal of folk music and the power of perseverance. Once travelling for hours in mini trucks to perform at village festivals, the couple continued pursuing their passion while waiting for wider recognition. Their participation in Super Singer’s folk music audition round proved to be a turning point. Since then, they have established themselves as playback singers and have taken their music to audiences across the world through international performances.
Sivaangi’s transformation into a popular entertainer
Sivaangi’s journey showcases how Super Singer helped nurture her musical abilities and introduce her to a wider audience. What began as a singing journey gradually evolved into a successful career in entertainment, with her distinctive personality and diverse talents making her a familiar and much-loved face among audiences.
One special performance that changed Priyanka NK’s journey
Priyanka NK’s story is another inspiring chapter in the campaign. A particularly memorable musical performance became a major turning point in her career, opening up new possibilities and giving fresh direction to her musical journey.
Together, these five stories reflect the central spirit of Super Singer – that talent has no boundaries and that the right opportunity can transform an individual’s life, irrespective of their background or circumstances.
Over the past 20 years, Super Singer has identified and nurtured more than 100 singers, many of whom have gone on to become playback singers in popular films and perform alongside leading music composers at concerts and live events. The show has consistently served as an important launchpad for emerging singing talent, adapting its format to changing musical trends, evolving genres and the preferences of younger audiences.
Super Singer Season 12 – New Age set to usher in a new musical chapter
As it enters its 12th season, Super Singer is ready to begin another exciting chapter with Super Singer Season 12 – New Age. Keeping pace with the changing musical landscape, the upcoming season aims to discover fresh voices and exceptional talent from the next generation of singers.
Super Singer Season 12 – New Age premieres on November 21 and will air every Saturday and Sunday at 6:30 PM on Star Vijay. Viewers can also catch the show on JioHotstar.
For the latest updates and announcements about Super Singer Season 12 – New Age, follow the official social media pages of Star Vijay and JioHotstar Tamil.
About JioHotstar
With an average of over 500 million monthly users and a content library spanning more than 300,000 hours, JioHotstar is one of the world’s leading streaming platforms. Its diverse content offering includes movies, original series, live sports, live events, animation, children’s entertainment and programming from over 100 television channels across the JioStar network. The platform offers content in 19 languages, catering to audiences across diverse entertainment preferences.
