Wednesday, October 28
Shadow

ஆஸ்கார் விருது 2019: ஆஸ்கர் விருது வென்றது இந்திய படம்

திரைத்துறையின் உயரிய விருதான ஆஸ்கார் விருது வழங்கும் விழா இன்று நடைப்பெற்று வருகின்றது. இதில் பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது.

ப்ளாக் பாந்தர் என்ற ஆங்கில படத்திற்கு சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருதை BLACK PANTHER படத்துக்காக ரூத் கார்டர், தயாரிப்பு வடிவமைப்பாளர் ஹன்னா பீச்லர், செட் அமைப்பாளார் ஜே ஹார்ட் என மொத்தம் 3 விருதுகள் வென்று அசத்தியுள்ளது.

மாதவிடாய் பற்றி உருவாக்கப்பட்ட ப்ரீயட். தி என்ட் ஆஃப் சென்டென்ஸ் (மாதவிடாய். வாக்கியம் முற்றுப்பெறுகிறது) என்கிற இந்தியாவில் தயாரான ஆவணப்படம், 2019 ஆஸ்கார் விருதுக்கான குறு ஆவணப்படப் பிரிவில் விருது வென்று பெருமையை தேடித் தந்துள்ளது.

மாதவிடாய் குறித்து இந்தியப் பெண்களிடையே நிலவும் தவறுதலான புரிதல், கற்பித்தலை கருப்பொருளாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய திரைத்துறையில் மாற்று சினிமா பாணியை ஏற்படுத்திய ’மாஸான்’, ‘தி லஞ்ச்பாக்ஸ்’ போன்ற படங்களை எடுத்த ’சிக்கீயா எண்டெயர்மென்ட்’ நிறுவனம் இந்த குறு ஆவணப்படத்தை தயாரித்துள்ளது.