Monday, April 20
Shadow

பகடி ஆட்டம் – திரை விமர்சனம் ( ஒரு முறை விளையாடலாம்) Rank 2/5

தமழ் சினிமா எப்ப உருவானதோ அப்பா ஆரம்பிக்க பட்டது பழிவாங்கும் கதை என்பது அது தான் இந்த படமும் பழிவாங்கும் கதை தான் பகடி ஆட்டம் பல புதியமுகங்கள் ஆனால் எல்லோரும் மிக சிறந்த நடிப்பு என்று தான் சொல்லணும் ஒரு காலத்தில் புதிய முகங்கள் என்றால் அய்யோ என்று ஓடிய காலம் போய் இப்ப இந்த படத்தி என்ன புதுமை பண்ணி இருகாங்க என்று யோசிக்க வைக்கபடுகிரார்கள். அந்த அளவுக்கு சிறந்த படங்களையும் அதிக திறமை கொண்ட நடிகர்களும் வருகின்றனர்.

அப்படி வந்துள்ள படம் தான் பகடி ஆட்டம் புதுமுகங்களாக கௌரி நந்தா நாயகனாக சுதா,மோனிகா , கருத்தம்மா ராஜஸ்ரீ கொவைசெந்தில் அகில் முக்கிய வேடத்தில் ரகுமான் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் தான் பகடி ஆட்டம் நீண்ட இடைவெளிக்கு பின் இளையராஜா மூத்த மகன் கார்த்திக் ராஜா இசை படத்துக்கு ஒளிப்பதிவு கிருஷ்ணசாமி இப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகும் ராம் கே சந்திரன்

நாயகன் சுரேந்தர் பெண்கள் விஷயத்தில் ரோமியோ. பார்க்கிற பெண்களையெல்லாம் அடையவேண்டும் என்ற எண்ணத்திலேயே சுற்றுபவர். இவருடைய அப்பா நிழல்கள் ரவி பெரிய செல்வந்தர், அம்மா ராஜஸ்ரீ பொறுப்பான குடும்பத் தலைவி. மகன் மீது அதிக பாசத்தை பொழிபவர்.

இந்நிலையில், சுரேந்தர் ஒருநாள் மோனிகாவை பார்த்ததும் அவள்மீது ஆசைப்படுகிறார். மோனிகாவின் குடும்பம் அவளுடைய அக்கா கௌரி நந்தா ஆட்டோ ஓட்டி கொண்டுவரும் பணத்தில்தான் பிழைப்பு நடத்தி வருகிறது. தனது குடும்ப சூழ்நிலையை மறந்த மோனிகா தன் மீது சுரேந்தர் காட்டும் அக்கறையை காதல் என்று நம்பி அவனது வலையில் விழுகிறாள்.

இதை அறிந்த கௌரி நந்தா, தனது தங்கையை அழைத்து கண்டிக்கிறாள். அக்காவின் கண்டிப்பில் மனம் திருந்திய மோனிகாவை தனது வழிக்கு கொண்டுவர சுரேந்தர் முயற்சி செய்கிறான். தனது அம்மாவிடம் அவளைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் கூறிவிட்டதாகவும், அம்மாவிடம் வந்து உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு தனது வீட்டிற்கும் அழைத்து செல்கிறான்.

இதையெல்லாம் உண்மை என்று நம்பி செல்லும் மோனிகாவை, சுரேந்தர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவளை தன்வசப்படுத்தி நெருக்கமாக இருக்கிறான். அதை வீடியோவும் எடுத்துவிடுகிறான். இதனால், தனது மானம் பறிபோனதே என்று பதறும் மோனிகா தூக்கு போட்டு தற்கொலை செய்துகொள்கிறாள்.

தனது தங்கையின் இந்த பரிதாப முடிவுக்கு காரணமான சுரேந்தரை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று துடிக்கிறாள் கௌரி நந்தா. இந்நிலையில், சுரேந்தர் திடீரென காணாமல் போகிறார். அவரை கண்டுபிடிக்க நிழல்கள் ரவி தனது செல்வாக்கை பயன்படுத்தி கமிஷனர் அளவில் போய் பேசுகிறார்.

இதனால், சுரேந்தரை கண்டுபிடிக்க அசிஸ்டென்ட் கமிஷனரான ரகுமான் நியமிக்கப்படுகிறார். அவர் சுரேந்தரை தனது போலீஸ் மூளையால் கண்டுபிடித்தாரா? காணாமல் போன சுரேந்தர் என்ன ஆனார்? என்பதற்கு பிற்பாதியில் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.

படத்தின் முத்த பாதி காதல் ஜொள்ளு கலாட்டா என்று போகும் படம் இரண்டாம் பாகம் செமையாக சூடு பிடிகிறது நயகன் கடத்தல் பிறகு ஹீரோக்கு என்ன ஆகுமோ என்ற ஒரு பயம் படம் பார்க்கும் நம்மளையும் வரவைதுள்ளர் இயக்குனர் படத்துக்கு மிக முக்கிய பலம் என்றால் அது ரகுமான் என்று தான் சொல்லணும் இவர் படத்தின் அறிமுக காட்சியில் இருந்து வேகம் சூடு பிடிக்கிறது மீண்டும் ஒரு சிறந்த போலீஸ் கதாபாத்திரத்தை கண் முன் நிறுத்தி இருக்கிறார் .

கௌரி நந்தா முதல் படம் தனக்கு கொடுத்த பங்கை மிக சிறப்பாக செய்துள்ளார். என்று தான் சொல்லணும் பெண்களிடம் நிஜ வாழ்கையுளும் செமையாக வழிவார் போல தெரிகிறது அதை அப்படியே வெளிபடித்தியுள்ளார் என்று தான் சொல்லணும்.

இயக்குனர் ராம் கே சந்திரன் தமிழ் சினிமாவுக்கு நல்ல வரவு என்று சொல்லணும் ஆனால் முதல் பாதியில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம் என்று தோன வைக்கிறது நாயகனை யார் கடத்தினார்கள் என்ற சஸ்பென்ஸ் அருமையாக கையாண்டு இருக்கிறார்.

மொத்தத்தில் பகடி ஆட்டம் ஒரு முறை விளையாடலாம் Rank 2/5

Leave a Reply