
சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர் என்று தான் சொல்லணும் அஜித் விஜய் அடுத்து இவர் என்று என்ற அளவுக்கு இன்று முக்கிய இடத்தை பிடித்துள்ளார். என்று நிச்சயமாக சொல்லலாம் அந்த அளவுக்கு வியாபாரம் ரசிகர்கள் பட்டாளம் தொடர் வெற்றி தான் ஒரு முன்னணி நடிகர் என்று படத்துக்கு படம் நிருபித்து வருகிறார் அது மட்டும் இல்லாமல் தொடர் வெற்றி நாயகன் என்றும் சொல்லலாம். இதனாலே என்னவோ இவருக்கும் ரஜினி இடத்தின் மீது ஆசை வந்துள்ளது போல தெரிகிறது ஐவரும் ரஜினி பட டைட்டில் தேர்வு செய்துள்ளார். நிச்சயம் இவருக்கு அந்த இடத்தை பிடிப்பார் என்ற நம்பிக்கையும் இருக்கு என்று தான் சொல்லணும் பொருத்து இருந்து பாப்போம்.
நடிகர் சிவகார்த்திகேயன் ரெமோ படத்தை அடுத்து ‘தனி ஒருவன்’ ராஜா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களோடு பிரபல மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில், சினேகா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், பிரகாஷ் ராஜ் என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்து நடித்து வருகிறது.
இப்படத்துக்கு வேலைக்காரன் என டைட்டில் வைத்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து Google Trends-ல் இன்று சிவகார்த்திகேயனின் பெயர் 5 ஆவது இடத்தை பிடித்துள்ளது. மேலும் சமூக வலைதளங்களிலும் வேலைக்காரன் டைட்டில் டிரெண்டிங்கில் உள்ளது.
