தமிழ் சினிமாவில் பலதரப்பட்ட இயக்குனர்கள் உள்ளனர் ஒரு சிலர் மட்டுமே தரமான கதை அம்சம் கொண்ட படங்களை கொடுக்கும் இயக்குனர் அதில் மிகவும் முக்கியமான ஒரு இயக்குனர் என்றால் அது இயக்குனர் ராம் என்று ஆணித்தரமாக சொல்லலாம் இது வரை இவர் இயக்கிய எல்லா படங்களும் கதைக்கும் கலாச்சாரத்துக்கும் முக்கியத்துவம் அமைந்த கதைகள் தான் அந்த வகையில் இவரின் அடுத்த காவியம் பேரன்பு என்று தான் சொல்லணும்.

பேரன்பு இந்த படம் ராம் இயக்கத்தில் பி.எல் தேனப்பன் தயாரிப்பில் மம்மூட்டி, தங்க மீன்கள் சாதனா, அஞ்சலி, தயாரிப்பாளர் பி.எல் தேனப்பன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ளது.

இப்படத்தில் மம்மூட்டி துபாயில் வேலை செய்து வருகிறார். இவருக்கு மகள் பிறந்திருப்பதாகவும் ஆனால் மூளை முடக்கு வாதம் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. மகள் இப்படி மாற்று திறனாளியாக பிறந்து விட்டாலே என்பதால் அவர் தன் மகளை கூட பார்க்க வராமல் இருந்து விடுகிறார். மம்மூட்டியின் மனைவியே குழந்தையை வளர்க்கிறார். ஒரு கட்டத்தில் அவர், இனியும் என்னால் பெண்ணை பார்த்து கொள்ள முடியாது. இனி நீங்க பார்த்துக்கோங்க என வேறொரு வாழ்க்கையை தேடி சென்று விடுகிறார்.

அதன் பின்னர் மம்மூட்டி தன்னுடைய மகளுக்காக வாழ தொடங்குகிறார். என்னதான் மாற்று திறனாளியாக இருந்தால் அந்தந்த வயதிற்கேற்ற ஆசைகள் உருவாவது தானே இயற்கை. அதே தான் இந்த பெண்ணிற்கும் ஏற்படுகிறது. இதையெல்லாம் எப்படி கடந்து வருகிறார்கள்? இதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்பதே இப்படத்தின் கதை.

மம்மூட்டி இந்த படத்தில் நடிக்கவில்லை. மாற்று திறனாளி பெண்ணின் அப்பாவாகவே வாழ்ந்துள்ளார். இந்துய சினிமாவின் சொத்து மம்மூட்டி என்பதை பல முறை நிருபித்து வருகிறார். அந்த வகையில் இந்த படத்திலும் தன்னை நிலை நிறுத்தியுள்ளார்.படத்தை முழுமையாக தாங்கி பிடித்துள்ளார். மம்மூட்டி என்று தான் சொல்லணும்.

தங்க மீன்கள் படத்திற்கு பிறகு சாதனா மீண்டும் ராம் இயக்கத்தில் நடித்துள்ளார். தங்க மீன்கள் போலவே சாதனா இந்த படத்திலும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஒரு இடத்தில் கூட குறை கூட முடியாத அளவிற்கு தன்னுடைய நடிப்பால் அனைவரையும் கவர்ந்துள்ளார்.

அஞ்சலி இப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள போதும்,மிகவும் முக்கியமான பாத்திரம் மிகவும் அழகாக தன்னுடைய நடிப்பை கொடுத்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜாவின் இசை இப்படத்திற்கு மிக பெரிய பலம். காட்சிகளை விட இப்படத்தின் இசை தான் கதையை வெளிப்படுத்துகிறது என்பதே உண்மை, சூர்யா பிரதமனின் எடிட்டிங், தேனீஸ்வரின் ஒளிப்பதிவு என இரண்டுமே இப்படத்திற்கு கூடுதல் பலம். இருவருமே படத்திற்கு என்ன தேவையோ அதை அழகாக செய்துள்ளனர்.

படத்தின் பிளஸ்

+ ஒட்டு மொத்த நடிகர் நடிகைகளின் நடிப்பு.
+ படத்தின் கதை
+ திருநங்கைகளின் பற்றியும் பேசியது பாராட்டத்தக்கது.

Related