Tuesday, February 11
Shadow

பாட்டி, பேத்தி என இரட்டை வேடத்தில் நடிக்கும் இளம் நடிகை

காளி படத்தில் அறிமுகமாகி, இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் படம் மூலம் பிரபலமான நடிகை ஷில்பா மஞ்சுநாத்,  இவர் மேடை நாடகத்தில் தன் நடிப்புப் பயணத்தைத் தொடங்கி, தற்போது கன்னடம், தமிழ், மலையாளம் என மூன்று மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார்.

சினிமாவுல நடிக்க தன்னைத் தயார்படுத்திக்கவே இவர் மேடை நாடகங்கள்ல நடித்துள்ளார். சினிமா வாய்ப்புகள் தேடிக்கிட்டிருந்த சமயத்துல தனக்கு நடிப்பு வரலைனு பல இயக்குநர்கள் நிராகரிச்ச பின்னர், நடிப்பைக் கத்துக்க மேடை நாடகங்கள்ல நடிச்சு திறமையை வளர்த்து கொண்டார்.

தற்போது பேரழகி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஷில்பா பாட்டி, பேத்தி என இரு வேடத்தில் நடிக்க உள்ளார் என்று தெரிய வந்துள்ளது. இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் பின்னர் ஷில்பாவின் நடிப்பில் வெளியாக உள்ள படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.