Friday, April 17
Shadow

Tag: #Shilpa

பாட்டி, பேத்தி என இரட்டை  வேடத்தில் நடிக்கும் இளம் நடிகை

பாட்டி, பேத்தி என இரட்டை வேடத்தில் நடிக்கும் இளம் நடிகை

Latest News, Top Highlights
காளி படத்தில் அறிமுகமாகி, இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் படம் மூலம் பிரபலமான நடிகை ஷில்பா மஞ்சுநாத்,  இவர் மேடை நாடகத்தில் தன் நடிப்புப் பயணத்தைத் தொடங்கி, தற்போது கன்னடம், தமிழ், மலையாளம் என மூன்று மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார். சினிமாவுல நடிக்க தன்னைத் தயார்படுத்திக்கவே இவர் மேடை நாடகங்கள்ல நடித்துள்ளார். சினிமா வாய்ப்புகள் தேடிக்கிட்டிருந்த சமயத்துல தனக்கு நடிப்பு வரலைனு பல இயக்குநர்கள் நிராகரிச்ச பின்னர், நடிப்பைக் கத்துக்க மேடை நாடகங்கள்ல நடிச்சு திறமையை வளர்த்து கொண்டார். தற்போது பேரழகி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஷில்பா பாட்டி, பேத்தி என இரு வேடத்தில் நடிக்க உள்ளார் என்று தெரிய வந்துள்ளது. இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் பின்னர் ஷில்பாவின் நடிப்பில் வெளியாக உள்ள படம் இது என்பது குறிப்பிடத்தக்கது....
விஜய் சேதுபதி படத்தில் டப்ஸ்மேஷ் மிர்னாலினி

விஜய் சேதுபதி படத்தில் டப்ஸ்மேஷ் மிர்னாலினி

Latest News, Top Highlights
தியாகராஜன் குமாரராஜா இயக்கி தயாரித்து வரும் படம் `சூப்பர் டீலக்ஸ்'. விஜய் சேதுபதி, பகத் பாஷில், சமந்தா, காயத்ரி சங்கர், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் டப்ஸ்மேஷ் பிரபலம் மிர்னாலினி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் மூலம் மிர்னாலினி தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். தியாகராஜன் குமாரராஜா எழுதி இயக்கும் இந்த படத்திற்கு மிஷ்கின், நலன் குமாரசாமி மற்றும் நீலன் சேகர் இணைந்து திரைக்கதை எழுதியிருக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். பி.எஸ்.வினோத், நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கின்றனர். இப்படத்தில் ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். வேம்பு என்ற கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கிறார்....
கொலை செய்ய துணிந்த சமந்தா – வைரலாகும் வீடியோ

கொலை செய்ய துணிந்த சமந்தா – வைரலாகும் வீடியோ

Latest News, Top Highlights
‘ஆரண்ய காண்டம்’ புகழ் தியாகராஜன் குமாரராஜா அடுத்ததாக இயக்கிய வரும் வரும் படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இதில் விஜய் சேதுபதி ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் முதல்முறையாக திருநங்கையாக நடிக்கிறார். பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகவதி பெருமாள், இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு தியாகராஜன் குமாரராஜா, மிஷ்கின், நலன் குமாரசாமி இணைந்து திரைக்கதை எழுதியிருக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில், இந்த படத்தை தியாகராஜன் குமாரராஜா தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். பி.எஸ்.வினோத் மற்றும் நிரவ்ஷா ஒளிப்பதிவு பண்களை மேற்கொண்டுள்ளனர். முன்னதாக இப்படத்தில் இருந்து விஜய் சேதுபதியின் ஷில்பா கதாபாத்திரத்திற்கான புகைப்படம் வெளியாகி மூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இந்நிலையில், சமந்தா கதாபாத்திரம் குறித்து சி...