Wednesday, June 24
Shadow

100 கோடி வசூல் செய்த ரஜினிகாந்த் பேட்ட

2019ம் ஆண்டு பொங்கலை சினிமா ரசிகர்கள் நான்கு தினங்கள் முன்னதாகவே கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’, அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ ஆகிய படங்கள் ஜனவரி 10ம் தேதியே வெளியாகின.
இரண்டு படங்களைப் பற்றி ஆகா, ஓகோ என்று விமர்சனங்கள் வரவில்லை என்றாலும், மோசமாக இல்லை, பார்க்கலாம் என்று படம் பார்த்த பலரும் கருத்து தெரிவித்தால் இரண்டு படங்களின் வசூலும் தொடர்ந்து திருப்திகரமாக உள்ளதாக வினியோக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருந்தும் தமிழக அளவில் அஜித்தின் விஸ்வாசம் வசூலில் சாதனை பிடித்துள்ளது அதோடு நீண்ட இடைவெளிக்கு பின் அஜித் படம் மக்களின் விருப்பத்துக்கு அமைந்துள்ளது அதோடு இந்த படம் தேவர் மகன் சாதனையை உடைத்துள்ளது ரஜினிகாந்த் படத்தை விட வசூல் சாதனை தான் அது

‘பேட்ட’ படம் மூன்று நாட்களிலேயே 100 கோடி வசூலைத் தாண்டியதாக சிலர் தெரிவிக்கிறார்கள். படத்தின் முதல் நாள் உலக வசூல் 35 கோடியாகவும், இரண்டாம் நாள் வசூல் 30 கோடியாகவும், மூன்றாம் நாள் வசூல் 40 கோடியாகவும் தோராயமாக வசூலித்திருக்கும் என்று கணக்கு சொல்கிறார்கள். இது உலக அளவிலான வசூல் கணக்காம்.#peta #boxoffice #sunpictures #100croe #karticksubburaj