Wednesday, June 24
Shadow

தளபதி விஜய்யை பெருமைபடுத்திய பிரபல நடிகை

தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று ரஜினிகாந்த் அவர்களாலே சொல்லப்பட்டவர் தளபதி விஜய் இவர் படங்கள் என்றாலே உலக மக்களிடம் மிக பெரிய வரவேற்ப்பு இருக்கும் காரணம் இவர் படத்தில் மக்களுக்கு தேவையான அனைத்து ரசனைகளும் அடங்கியிருக்கும் இதனால் யாவருக்கு உலகெங்கும் ரசிகர் பட்டாளம் அதோடு மக்கள் பிரச்சனையை பேசுவார் அதை செயலிலும் செய்வார் இதனால் மக்கள் செல்வாக்கு அதிகம்

அதோடு அரசியல் எதிரிகள் அதிகம் இருந்தும் இவர் மக்களுக்கான குரல் கொடுத்து கொண்டேதான் இருப்பார் இதனால் இவரின் ஒவ்வொரு படங்கள் ரிலீஸ் பிரச்சனை வந்த போதும் மக்களுக்கான விஷயங்களை பயப்படாமல் பேசுவார்.

கபாலி, காலா படங்கள் வெளியான நேரத்தில் ரஜினி ரசிகர்களிடம் டுவிட்டரில் மல்லுக்கட்டி வந்தவர் நடிகை கஸ்தூரி. அதன்பிறகு சர்கார் படம் வெளியானபோது விஜய் ரசிகர்களின் செயல்பாடுகள் குறித்து விமர்சனம் செய்து அவர்களின் கண்டனத்திற்கு ஆளானார்.

அதையடுத்து தற்போது அஜீத் ரசிகர்களிடமும் மோதலில் ஈடுபட்டு வரும் கஸ்தூரி, ஒரு பேட்டியில், சர்கார் சர்ச்சை குறித்து ஒரு கருத்து கூறியிருக்கிறார். அதாவது, விஜய் ரசிகர்களும் ரஜினி, அஜீத் ரசிகர்களைப்போன்று உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள்தான். அதைதான் சர்கார் படத்திற்கான எதிர்ப்பு எழுந்தபோது அவர்கள் வெளியிட்டார்கள்.

ஆனபோதும், சர்கார் சர்ச்சையின்போது விஜய் அமைதியாக இருந்தார். அதைப்பார்த்து அவர் பயந்து விட்டதாக சிலர் சொன்னார்கள். ஆனால் பயப்படுவதற்கும், விட்டுக்கொடுப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. விட்டுக்கொடுப்பது பெரிய மனுஷத்தன்மை என்று சொல்லி விஜய்யை பெருமைப்படுத்தியிருக்கிறார் கஸ்தூரி #vijay #thalapathy #kashthoori #people